வேகன் ஆர், பலேனோ கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசுகி

0

Maruti WagonR front

மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் மற்றும் பலேனோ என இரு கார்களிலும் சுமார் 134,885 கார்களின் ஃப்யூவல் பம்ப் தொடர்பான கோளாறை சரி செய்வதற்காக திரும்ப அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Google News

குறிப்பாக, மாருதியின் வேகன் ஆர் மாடல்களின் எண்ணிக்கை 56,663 கார்கள் தயாரிக்கப்பட்ட நவம்பர் 15, 2018 – அக்டோபர் 15, 2019 வரையும், பலேனோ கார்களில் ஜனவரி 8, 2019 – நவம்பர் 4, 2019 வரை உற்பத்தி செய்யப்பட்ட 78,222 கார்களில் இந்த எரிபொருள் பம்ப் கோளாறு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கோளாறு ஏற்பட்டுள்ள உதிரி பாகத்தை முற்றிலும் இலவசமாக எவ்விதமான கட்டணமுமின்றி மாற்றித் தரப்பட உள்ளது. உங்களுடைய வாகனம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிய மாருதி சுசூகியின் வேகன் ஆர் பயனாளர்கள் அரினா இணையதளம் மூலமாக ‘Imp Customer Info’ என்ற பகுதியில் அறியலாம். அதே நேரத்தில் பலேனோ வாடிக்கையாளர்கள் நெக்ஸா இணையதளத்தில் பார்க்கலாம்.

‘Imp Customer Info’ பகுதியில் உங்களுடைய வாகனத்தின் அடிச்சட்ட எண் (chassis number MA3 or MBH) கொண்டு அறிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு உங்கள் அருகாமையில் உள்ள மாருதி டீலரை தொடர்பு கொள்ளவும்.