பாடி கிராபிக்ஸ், க்ரோம் இன்ஷர்ட் உள்ளிட்ட வசதிகளுடன் கூடியதாக மாருதி செலிரியோ லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. செலிரியோ எஞ்சின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.

மாருதி செலிரியோ லிமிடேட் எடிசன்

மாருதி செலிரியோ லிமிடேட் எடிசன்

டாடா டியாகோ, ரெனோ க்விட் 1.0, டாடா நானோ காருக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டுள்ள செலிரியோ காரில் 3 சிலிண்டரை பெற்ற 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 67 hp ஆற்றலுடன் 90 Nm டார்க்கினை வழங்கும் எஞ்சின் பொருத்தப்பட்டு 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

மாருதி செலிரியோ லிமிடேட் எடிசன்

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள செலிரியோ லிமிடேட் எடிசன் தோற்ற அமைப்பில் புதிய பாடி கிராஃபிக்ஸ், சைட் மோல்டிங்கஸ், டோர் வைசர் போன்றவற்றுடன் பனிவிளக்கு, முகப்பு விளக்கு, டெயில்கேட் மற்றும் டெயில் விளக்கில் க்ரோம் அக்சென்ட்ஸ்களை பெற்றதாக வந்துள்ளது. இன்டிரியரில் இரு வண்ண கலவை பெற்ற இருக்கை கவர்கள், ஸ்டீயரிங் வீல் கவர் , ஆம்பியன்ட் லைட்டிங், பார்க்கிங் சென்சார் போன்வற்றை பெற்றுள்ளது.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கூடுதல் வசதிகளை பெற்ற மாருதி செலிரியோ எடிசன் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

மாருதி செலிரியோ லிமிடேட் எடிசன் மாருதி செலிரியோ லிமிடேட் எடிசன்