Site icon Automobile Tamilan

40,453 ஈக்கோ கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசூகி

eeco

மாருதி சுசூகி வெளியிட்டுள்ள அறிக்கையில் நவம்பர் 4, 2019 முதல் பிப்ரவரி 25, 2020 வரை தயாரிக்கப்பட்ட 40,453 ஈக்கோ கார்களில் உள்ள ஹெட்லைட்டில் காணக்கூடிய ஸ்டாண்டர்டு அடையாளம் இல்லாதவற்றை திரும்பெற உள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற வேன் ரக ஈக்கோ காரில் உள்ள ஹெட்லைட்டில் காணக்கூடிய ஸ்டாண்டர்டு அடையாளம் இல்லாத மாடல்களை திரும்ப பெற்று எவ்விதமான கூடுதல் கட்டணமில்லாமல் இலவசமாக கோளாறினை சரி செய்ய உள்ளதாக தானாக முன்வந்து மாருதி சுசூகி அறிவித்துள்ளது.

அதாவது நவம்பர் 4, 2019 முதல் பிப்ரவரி 25, 2020 வரை தயாரிக்கப்பட்ட 40,453 ஈக்கோ கார்களில் இந்த பிரச்சனை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் காரின் சேஸ் எண்ணை (MA3 followed by 14 digit alpha-numeric number) மாருதியின் இணையதளத்தில் ‘Imp Customer Info’ பகுதியில் உள்ளிட்டு அறிந்து கொள்ளலாம்.

web title : Maruti Suzuki issued recall 40,453 units of Eeco

Exit mobile version