Site icon Automobile Tamil

மாருதி சியாஸ் காரில் புதிய 1.5 லி டீசல் என்ஜின் விபரம்

மாருதி சுசூகி நிறுவனம் புதிதாக மிக சிறப்பான டார்க் மற்றும் செயல்திறனை வழங்கும் மாருதி 1.5லி டீசல் என்ஜின் மாடலை தற்போது விற்னையில் உள்ள ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக நிலைநிறுத்த உள்ளது.

மாருதி 1.5லி டீசல் என்ஜின்

ஏப்ரல் 1, 2020 முதல் பாரத் ஸ்டேஜ் 6 மாசு விதிமுறை நடைமுறைக்கு வரவுள்ளதால், மாருதி உட்பட பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் என்ஜினை பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றுவதனை இந்நிறுவனம் கைவிட திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக மாருதி நிறுவனம் தனது சொந்த முயற்சியில் மிக சிறப்பான 1.5 லிட்டர் என்ஜினை E15A என்ற பெயரில் தயாரித்து வருகின்றது.

டீம் பிஎச்பி வெளியிட்டுள்ள தகவலில், புதிய 1.5 லிட்டர் என்ஜின் அதிகபட்சமாக 4000 ஆர்பிஎம்-யில் 94 பிஹெச்பி பவர் மற்றும் 1500-2000 ஆர்பிஎம்-யில் மிக அதிகப்படியாக 225 என்எம் இழுவைத் திறனை வழங்க்ககூடும் என குறிப்பிட்டடுள்ளது. முதற்கட்டமாக பிஎஸ் 4 நடைமுறையில் இந்த என்ஜின் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பிஎஸ் 6 நடைமுறை பயன்பாட்டுக்கு வரும்போத, தற்போது விற்பனையில் உள்ள டீசல் கார்களின் விலை அதிகபட்சமாக 2.50 லட்சம் வரை விலை உயரக்கூடும் என மாருதி மன்பே தெரிவித்திருப்பதால், டீசல் காரை விட ஹைபிரிட் மற்றும் பேட்டரியில் இயங்கும் கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.

மாருதி சுசுகியின் புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் முதற்கட்டமாக சியாஸ், எர்டிகா , எஸ்-கிராஸ் மாடல்களிலம், அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் வெளியாக உள்ள மாருதி பிரிமியம் எஸ்யூவி மற்றும் 1.3 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக இந்த என்ஜின் பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு ஏற்ற வகையில் இணைக்கப்பட உள்ளது.

Exit mobile version