Home Car News

எஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி

maruti s-presso

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி விற்பனைக்கு வந்த ரூ.3.69 லட்சத்தில் வந்த மாருதி எஸ் பிரெஸ்சோ மினி எஸ்யூவி காரின் முன்பதிவு தொடங்கப்பட்ட 11 நாட்களில் 10,000 முன்பதிவுகளை கடந்திருப்பதுடன், முதல் மாதத்தில் 5,006 யூனிட்டுகளை இந்நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.

மாருதியின் வளமையான டீலர் நெட்வொர்க் மற்றும் செல்வாக்கு போன்றவை எஸ் பிரெஸ்சோ காருக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுக்க காரணமாகியுள்ளது. குறிப்பாக இந்த கார் விட்டாரா பிரெஸ்ஸாவின் தோற்ற உந்துதலை பின்னணியாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், இன்டிரியர் அமைப்பில் டேஸ்போர்டின் சென்டரல் கன்சோலில் வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இந்த காருக்கு கூடுதலான சிறப்பாக மைலேஜ் லிட்டருக்கு 21.7 கிமீ ஆகும்.

இந்த காரில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் K10B 1.0 லிட்டர் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 50 கிலோவாட் (68 பிஎஸ்) அதிகபட்ச சக்தியை 5,500 ஆர்பிஎம் மற்றும் 90 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்-ல் வழங்கும். இந்த மாடலில் 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் விற்பனை செய்யப்படுகின்றது.

சராசரியாக சிட்டி மற்றும் ஹைவே பயன்பாட்டின் போது மைலேஜ் லிட்டருக்கு 17 கிமீ முதல் 19 கிமீ வரை கிடைக்கும்.

கட்டாய பாதுகாப்பு வசதிகளான ஓட்டுநர் ஏர்பேக், ஏபிஎஸ்,  ரியர் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டிருக்கின்றது. கூடுதலாக உடன் பயணிப்பவருக்கான ஏர்பேக் என்பது ஆப்ஷனல் வேரியண்டில் மட்டும் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு சார்ந்த கூடுதல் வசதிகள் பேஸ் வேரியண்டில் ஆப்ஷனலாக மட்டுமே வழங்கப்படுகின்றது.

போட்டியாளர்கள்

ரெனோ க்விட் மற்றும் டட்சன் ரெடி-கோ போன்ற கார்களை எதிர்கொள்ளுகின்றது.

மாடல் விலை (ex-showroom, Delhi)
1.0 லிட்டர் என்ஜின்
ரெனோ க்விட் ₹ 4.33 முதல் ₹ 4.84 லட்சம்
டட்சன் ரெடி-கோ ₹ 3.90 முதல் ₹ 4.37 லட்சம்
மாருதி எஸ் பிரெஸ்ஸோ ₹ 3.69 முதல் ₹ 4.91 லட்சம்

மேலும் படிங்க – மாருதி எஸ் பிரெஸ்சோ காரின் முழுமையான விபரங்கள்

Exit mobile version