Automobile Tamil

மாருதியின் எஸ்-பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி படங்கள் வெளியானது

மினி எஸ்யூவி மாடலாக வலம் வரவுள்ள மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ காரின் நடுத்தர வேரியண்ட் மாடலின் படங்கள் வெளியாகியுள்ளது. இன்டிரியரின் விபரங்கள் அல்லாமல் இம்முறையும் வெளிதோற்ற அமைப்புதான் வெளியாகியுள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி தோற்ற உந்துதலை முன்புறத்தில் பெற்றுள்ள இந்த எஸ்-பிரெஸ்ஸோ காரின் முகப்பு கிரில் அமைப்பு நேர்த்தியாக உள்ளதை தொடர்ந்து பம்பரில் எல்இடி ரன்னிங் விளக்குகள், கருப்பு நிற பம்பர், க்ரோம் பூச்சூ அல்லாத தோற்றம், 14 அங்குல சாதாரன ஸ்டீல் வீல் கருப்பு நிறத்தில் பெற்றுள்ளது.

எஸ்-பிரஸ்ஸோ காரில், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் K10B 1.0 லிட்டர் பொருத்தப்பட்டு பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையாக விளங்கும். 50 கிலோவாட் (67.98 பிஎஸ்) அதிகபட்ச சக்தியை 5,500 ஆர்பிஎம் மற்றும் 90 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்-ல் வழங்கும். இந்த மாடலில் 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வழங்கப்படும்.

இன்டிரியரில், முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்டில் உள்ளதை போன்றே அமைப்பினை வெளிப்படுத்தலாம். டார்க் கிரே நிறத்திலான டேஸ்போர்டின் மத்தியில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியா வசதியுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே போன்றவற்றை கொண்டிருக்கலாம். பேஸ் வேரியண்டில் ஸ்மார்ட்பிளே டாக் ஆடியோ சிஸ்டம் ப்ளூடூத் ஆதரவை கொண்டிருக்கும்.

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி விற்பனைக்கு விலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் டீலர்கள் வாயிலாக முன்பதிவு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ரெனோ க்விட், டட்சன் ரெடி-கோ மாடலை நேரடியாக எதிர்கொள்ள உள்ள எஸ்-பிரெஸ்ஸோவின் விலை ரூ.3.30 லட்சத்தில் தொடங்கலாம்.

image source -power stroke/ youtube

Exit mobile version