Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விழாகால சீசனுக்காக மாருதி நிறுவனத்தின் புதிய கார் அறிமுகம்

by MR.Durai
25 September 2018, 4:57 pm
in Car News
0
ShareTweetSend

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார்கள் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்வரும் விழாக்கால சீசனை முன்னிட்டு, தனது முதல் சிறப்பு எடிசன் கார்களை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த லிமிடெட் எடிசன் கார்களின் விலை 4,49 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ஷோ ரூம் விலை டெல்லியில்). இந்த கார்கள் LXi மற்றும் LDi வகைகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சிறப்பு எடிசன் வெர்சன்களில், புதிய வசதிகளாக ஹாட்ச் பேக்களுடன் கூடிய பேஸ் டிரிம் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை பொருத்தியதற்காக எந்த வகையான கூடுதல் கட்டணமும் காரின் விலையில் அறிவிக்கப்படவில்லை. புதிய லிமிடெட் எடிசன் ஸ்விஃப்ட் கார்கள், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இக்னிஸ் கார்களுடன் இணைந்து இந்த விழாகாலத்தில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் லிமிடெட் எடிசன்களில், சிங்கள் – DIN ப்ளு நிறத்திலான ப்ளுடூத் ஸ்டிரியோ, இத்துடன் இரண்டு ஸ்பீக்கர்கள் மற்றும் பிளாக் நிறத்தில் பெயின்ட் செய்யப்பட்ட வீல்கவர்களும் உள்ளன. கூடுதலாக ஸ்விஃப்ட் L டிரிம்களில், பிராண்ட் பவர் விண்டோகள், ABS, டூயல் பிராண்ட் ஏர்-பேக்ஸ் மற்றும் ரியர் பார்கிங் சென்சார்கள் வழக்கம் போலவே இடம் பெற்றுள்ளன. இந்த கார்களில் எந்தவிதமாக மெக்கனிக்கல் மாற்றமும் செய்யப்பட வில்லை. முந்திய மாடல்களில் இடம் பெற்ற அதே இன்ஜின்கள் இந்த காரிலும் பொருத்தப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் லிமிடெட் எடிசன் கார்களின் ஆற்றலை பொறுத்தவரை, இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார்கள், 82bhp மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்கள் 74bhp கொண்டதாக இருக்கும். இதில் உள்ள பேஸ் ரிம்கள் 5-ஸ்பீட் மெனுவல் மற்றும் AMT யூனிட் கொண்டதாக இருக்கும். மிட் லெவல் V மற்றும் ரேஞ்ச் டாப்பிங் z டிரிம்களை பெற்றிருக்கும்.

மாருதி சுசூகி ஸ்விஃப்ட், இந்தியாவில் விற்பனையாகும் முன்னணி கார்களின் வரிசையில் ஆல்டோ, டிசையர் கார்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த காரை மாதம் ஒன்றுக்கு 19,000 யூனிட்களை விற்பனை செய்ய மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஷோரூம்களுக்கு வந்துள்ள இந்த புதிய லிமிடெட் எடிசன் கார்கள், தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்விஃப்ட் கார்கள், ஹூண்டாய் கிராண்ட் i10, ஃபோர்டு ஃபிகோ, டொயோட்டா எட்டியோஸ், மஹிந்திரா KUV 100 கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Related Motor News

1 கோடி ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்த சுசுகி

வெற்றிகரமான 20 ஆண்டுகளை கொண்டாடும் மாருதி சுசூகி ஸ்விஃப்ட்

ஏப்ரல் 1, 2025 முதல் மாருதி சுசூகி கார்களின் விலை 4 % வரை உயருகின்றது

பிப்ரவரி 1 முதல்.., ரூ.32,500 வரை மாருதி சுசூகி கார்களின் விலை உயருகின்றது

2025 ஜனவரி முதல் மாருதி சுசூகி கார்களின் விலை 4% வரை உயருகிறது..!

ஸ்விஃப்ட் சிஎன்ஜி vs கிராண்ட் i10, டியாகோ ஒப்பீடு – எந்த சிஎன்ஜி கார் வாங்கலாம்.!

Tags: IndiaMaruti Suzuki Swift
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

maruti suzuki victoris launched

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

விக்டோரிஸ் மூலம் மாருதி சுசுகி கொண்டு வந்த நவீன வசதிகள்

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

425கிமீ ரேஞ்ச் ஸ்கோடா எபிக் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan