Automobile Tamilan

6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்

maruti xl6

மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் எர்டிகா காரின் அடிப்படையிலான XL6 காரில் இடம்பெற உள்ள வேரியண்ட், விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம். எக்ஸ்எல்6 காரில் பிஎஸ் 6 ஆதரவை பெற்ற 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஸ்மார்ட் ஹைபிரிட் வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளது.

சாதாரண எர்டிகா காரை விட பிரீமியம் வசதிகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட உள்ள எக்ஸ்எல் 6 எம்பிவி ரக மாடலில் 6 இருக்கைகள் பெற்றதாக விற்பனைக்கு ஆல்பா மற்றும் ஜெட்டா என இரு வேரியண்டுகளில் மாருதி நெக்ஸா கார் விற்பனையகங்களில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் கிடைக்க உள்ளது.

மாருதியின் XL6 காரில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான 1.5 லிட்டர் ஸ்மார்ட் ஹைபிரிட் SHVS பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 105 பிஎஸ் (77KW) பவருடன் 138 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 4 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் 5 மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது.

எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் லிட்டருக்கு 5 வேக மேனுவல் மாடலுக்கு 19.01 கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் அதிகபட்சமாக 17.99 கிமீ தரவல்லத்தாகும்.

விற்பனையில் உள்ள எர்டிகா காரை விட மிகவும் ஸ்டைலிஷான மற்றும் முரட்டு தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்ற கிரில் மற்றும் க்ரோம் பாகங்கள் மாருதி சுசுகி XL6 காரில் மிக நேர்த்தியான குவாட் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், பாடி கிளாடிங் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்படுவதனால் காரின் தோற்றம் கவனத்தைப் பெறுகின்றது.

இன்டிரியரில் 6 கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டு மாருதியின் 7.0 இன்ச் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருப்பதுடன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன் ப்ளூடூத், USB, AUX-in , க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்களை கொண்டதாக அமைந்திருக்கிறது. கூடுதலாக எக்ஸ்எல்6 ஆல்பா வேரியண்டில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, லெதர் இருக்கைகள், மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் போன்றவற்றை பெற்றிருக்கின்றது.

எக்ஸ்எல்6 காரின் மைலேஜ் லிட்டருக்கு 5 வேக மேனுவல் மாடலுக்கு 19.01 கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் அதிகபட்சமாக 17.99 கிமீ தரவல்லத்தாகும்.

மற்றபடிஇந்த மாடலில் இடம்பெற்றுள்ள வேரியண்ட் வாரியாக உள்ள முக்கிய வசதிகளில் சில குறிப்பிடதக்க அம்சங்களை காணலாம்.

XL6 Alpha வேரியண்டில் க்ரூஸ் கண்ட்ரோல், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஹீல் அசிஸ்ட் (ஆட்டோமேட்டிக்), ரியர் பார்கிங் சென்சார், கீலெஸ் என்ட்ரி அன்டு கோ, 7.0 இன்ச் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பவர் விண்டோஸ், ஸ்டீயரிங் மவுன்டேட் கன்ட்ரோல், 15 இன்ச் அலாய் வீல் போன்ற பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது.

XL6 Zeta வேரியண்டில் ஆல்பா வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, லெதர் இருக்கைகள், லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் உடன் ஃபாலோ மீ ஹோம் வசதி உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

மாருதி சுஸுகி XL6  மாடல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் இந்த காருக்கான முன்பதிவு கட்டணமாக ரூபாய் 11 ஆயிரம்  வசூலிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ரெனோ லாட்ஜி, எர்டிகா, மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ உட்பட பிரீமியம் இன்னோவா கிரிஸ்டா காருக்கும் சவாலினை ஏற்படுத்த வல்லதாக விளங்குகின்றது.

Exit mobile version