ஜனவரி 14.., மெர்சிடிஸ்-பென்ஸ் EQ மின்சார கார் பிராண்டு இந்தியாவில் அறிமுகமாகிறது

mercedes benz eqc

ஆடம்பர கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் மின்சார கார்களை விற்பனை செய்வதற்கான பிராண்டாக இக்யூ (EQ) விளங்குகின்றது. இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட உள்ள உற்பத்தி நிலை EQC எலக்ட்ரிக் கார் பற்றி தொடர்ந்து இங்கே அறிந்து கொள்ளலாம்.

மிகவும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை பெற்ற இக்யூசி காரில் மிக நேர்த்தியான கிரில் அமைப்பு மற்றும் யூனிக் ஸ்டைலை பெற்ற அலாய் வீல், இன்டிரியரில் அகலமான கிளஸ்ட்டர் மற்றும் பல்வேறு கனெக்ட்டிவ் சார்ந்த அம்சங்களை கொண்டிரக்கும்.

பென்ஸ் GLC எஸ்யூவி அடிப்படையில் 5 இருக்கை கொண்ட மாடலாக மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி மின்சார காரில் இரட்டை மின்சார மோட்டார் (முன் வீல் மற்றும் பின்புற வீல் என இரண்டிலும் தலா ஒரு மோட்டார்) பொருத்தப்பட்டு ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்று சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 400 கிமீ தொலைவு பயணிக்கும் வரம்புடன் வரவுள்ள உள்ள இக்யூசி காரில் 80kWh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு  407hp பவர் மற்றும் 765Nm டார்க் வெளிப்படுத்துவதுடன், இந்த மாடலில் உள்ள ஸ்போர்ட்ஸ் மோட் மூலம் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு 5.1 விநாடிகளும், உச்சபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ ஆக உள்ளது.

மேலதிக விபரங்கள் ஜனவரி 14, 2020-ல் வெளியாக உள்ள நிலையில் இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் EQ பிராண்டு விற்பனைக்கு இந்த ஆண்டின் இறுதி முதல் கிடைக்க உள்ளது.

Exit mobile version