60.84 லட்சம் ரூபாய்க்கு மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் கார் விற்பனைக்கு வந்தது

Mercedes Benz V Class

ஆடம்பர எம்பிவி ரக சந்தையில் களமிறங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் காரின் ஆரம்ப விலை ரூபாய் 60.84 லட்சத்தில் விற்பனைக்கு தொடங்குகின்றது. வேன் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும் வி கிளாஸ் உச்சகட்ட ஆடம்பர வசதிகளை பெற்றுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ்

இந்தியாவில் 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட MB100 மற்றும் MB140 வேன்கள், 2011 ஆம் ஆண்டில் வெளியான ஆர்-கிளாஸ் போன்ற வேன் ரக மாடல்கள் தோல்வியை தழுவியிருந்த நிலையில் மூன்றாவது முறையாக எம்பிவி ரக சந்தையில் வி கிளாஸ் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸ் காரின் விலை பட்டியல் பின்வருமாறு ;-

V-Class Expression – ரூ. 68.40 லட்சம்
V-Class Exclusive – ரூ. 81.90 லட்சம்

(விற்பனையக விலை, இந்தியா)

Mercedes Benz V Class 1

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களில் மொத்தமாக மூன்று வகையான வேரியன்டில் கிடைக்கின்ற நிலையில், இந்திய சந்தையில் 2+2+2, மற்றும் 2+2+3 ஆகிய இருக்கை அம்ங்களில் கிடைக்கின்றது. இன்டிரியரில் மிக நேர்த்தியான வசதிகளுடன் தாரளமான இடவசதியை வழங்குகின்றது.

GLE SUV மாடலில் இடம்பெற்றிருக்கின்ற எல்இடி முகப்பு விளக்குடன் பெற்று , மூன்று ஸ்லாட் கொண்ட கிரிலுடன் மூன்று புள்ளிகளை இணைக்கும் ஸ்டார் வடிவிலான மெர்சிடிஸ் லோகோவைவ பெற்று  பாக்ஸ் வடிவத்தில் அமைந்தள்ள இந்த எம்பிவி கார் சில்வர், நீலம், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்க உள்ளது.

163 hp பவர் மற்றும் 380Nm டார்க் வழங்குகின்ற 2.1 லிட்டர் டீசல் என்ஜின் பாரத் ஸ்டேஜ் 6 மாசு விதிகளை பின்பற்றியதாக அமைந்துள்ளது. இதில் 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 6 ஏர்பேக், 360 டிகிரி வடிவில் காரை சுற்றி கேமரா , ஏக்டிவு பார்க்கிங் உதவி போன்றவற்றை பெற்ற வி-கிளாஸ் காரில் உயர்தரமான மெட்டீரியல்கள் இடம்பெற்றுள்ளது.

Mercedes Benz V Class Space

Mercedes Benz V Class Dashboard

Mercedes Benz V class seats

Mercedes Benz V class