2021 எம்ஜி ஆஸ்டர் எஸ்யூவி காரின் எதிர்பார்ப்புகள்

0

mg astor suv

கிரெட்டா, செல்டோஸ், கிக்ஸ், டஸ்ட்டர் மற்றும் குஷாக் உள்ளிட்ட எஸ்யூவி கார்களை எதிர்கொள்ளும் வகையில் எம்ஜி மோட்டார் ஆஸ்டர் எஸ்யூவி விற்பனைக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியிட உள்ள நிலையில் இதன் முக்கிய சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் விற்பனையில் உள்ள இசட்.எஸ் எலக்ட்ரிக் காரின் அடிப்படையிலான மாடலை Astor என பெயரிடப்பட்ட இரண்டு பெட்ரோல் என்ஜின் பெற்ற மாடலாக வரவுள்ளது. ஹெக்டர் எஸ்யூவி காரின் கீழாக நிலைநிறுத்தப்பட உள்ள ஆஸ்டர் 4.3 மீட்டர் நீளம் கொண்டதாக விளங்குகின்றது.

எம்ஜி ஆஸ்டருக்கான என்ஜின் ஆப்ஷனில் 120 ஹெச்பி பவர் மற்றும் 150 என்எம், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் எதிர்பார்க்கப்படும் நிலையில் மிகவும் சக்திவாய்ந்த, 163 ஹெச்பி பவர் மற்றும் 230 என்எம், 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்டருக்கான கியர்பாக்ஸ் விருப்பங்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றது.

எம்ஜியின் குளோஸ்டர் எஸ்யூவி காரில் உள்ளதை போன்றே Level-2 ADAS (Advanced Driver Assistance Systems) சிஸ்டத்தை அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம்ஸ் பிரிவில் நெடுந்தொலைவு பயணத்தில் உதவுகின்ற ஆடாப்ட்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், அல்ட்ராசோனிக் சென்சாரின் உதவியுடன் செயல்படும் தானியங்கி பார்க்கிங் அசிஸ்ட், முன்புற மோதலை தடுக்கம் வசதி, ஆட்டோமேட்டிக் அவசர பிரேக்கிங் வசதி, பிளைன்ட் ஸ்பாட் அறிதல் மற்றும் லேன் மாறுவதனை கேமரா உதவியுடன் எச்சரிக்கும் லேன் வார்னிங் வசதியும் உள்ளது.

எம்ஜி ஆஸ்டர் எஸ்யூவி காரின் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் அமைய வாய்ப்புள்ளது.