Automobile Tamil

ஆட்டோ எக்ஸ்போ 2020: பிரீமியம் எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவி அறிமுகம்

mg gloster

ஆட்டோ எக்ஸ்போ2020 அரங்கில் எம்ஜி மோட்டார் நிறுவனம், புதிய 7 இருக்கை பெற்ற பிரீமியம் எஸ்யூவி ரக மாடலாக எம்ஜி குளோஸ்டர் காட்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் 2020 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு வெளியாகலாம்.

சர்வதேச அளவில் மேக்சஸ் டி90 என விற்பனை செய்யப்படுகின்ற மாடலின் இந்திய பதிப்பாக குளோஸ்டர் எஸ்யூவி விளங்குகின்றது. நமது நாட்டில் கிடைக்கின்ற டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் பஜெரோ ஸ்போர்ட் உள்ளிட்ட பிரபலமான பிரீமியம் எஸ்யூவி மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் வெளியிடப்பட உள்ளது.

மற்ற நாடுகளில் 224 BHP பவர் மற்றும் 360 Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு 6 வேக ஆட்டோ மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டிருக்கின்றது. பெட்ரோல் என்ஜின் கொண்ட டி90 காரில் 7 விதமான டிரைவிங் மோடுகள் உள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வெளியாகலாம். குறிப்பாக டீசல் என்ஜின் 218 ஹெச்பி பவர் மற்றும் 480 என்எம் வெளிப்படுத்தும் 2.0 டர்போ டீசல் என்ஜினை பெறக்கூடும்.

5 மீட்டர் நீளம் கொண்ட இந்த எஸ்யூவியின் வீல்பேஸ் 2,950 மிமீ ஆக உள்ளதால் மிக தாராளமான இடவசதியுடன், பல்வேறு டெக் வசதிகளை உள்ளடக்கிய 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டு இணையம் சார்ந்த பல்வேறு வசதிகளுடன் 8 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர், 6 ஏர்பேக், ஏபிஎஸ் உடன் இபிடி, 360 டிகிரி கேமரா போன்றவற்றை கொண்டிருக்கும்.

ரூபாய் 35 லட்சம் விலைக்குள் இந்தியாவில் எம்ஜி குளோஸ்டர் எஸ்யூவி ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு கிடைக்கலாம்.

Exit mobile version