Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவின் முதல் இணைய கார் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அறிமுகம்

by MR.Durai
16 May 2019, 7:39 am
in Car News
0
ShareTweetSend

mg hector suv news in tamil

MG Hector: நமது நாட்டில் முதல் காரை எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம், எம்ஜி ஹெக்டர் (MG Hector) என்ற பெயரில் பல்வேறு சிறப்பு டெக் வசதிகள் கொண்ட எஸ்யூவி ரக மாடல் காராக அறிமுகம் செய்துள்ளது. ஹெக்டர் காருக்கான முன்பதிவு ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஹலோல் தொழிற்சாலையில் வர்த்தகரீதியான உற்பத்தியை தொடங்கியுள்ள இந்நிறுவனம், தனது முதல் மாடலை ஜூன் மாத மத்தியில் விற்பனைக்கு கொண்டு வருகின்றது. முதற்கட்டமாக தற்போது 50 நகரங்களில் 120 டீலர்களை திறந்துள்ள எம்ஜி நிறுவனம், செப்டம்பர் மாத இறுதிக்குள் 130 டீலர்களாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் 250க்கு மேற்பட்ட டீலர்களை நாடு முழுவதும் தொடங்க உள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி சிறப்புகள்

இந்தியாவில் செயல்பட்டு வந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே பிராண்டிற்கான குஜராத் ஆலையை ரூ.2,200 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் நிறுவனம் புதுப்பித்துள்ளது.

முதற்கட்டமாக 5 இருக்கை கொண்ட எஸ்யூவி ரக மாடலாக விற்பனைக்கு வரவுள்ள ஹெக்டரின் 7 இருக்கை மாடல் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி செய்திகள்

ஹெக்டரின் என்ஜின்

1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் என இரு விதமான ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. BS4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டதாக வந்துள்ளது.

143hp குதிரைத்திறன் மற்றும் 250Nm இழுவைத்திறன் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது. டர்போ பெட்ரோல் என்ஜினில் மட்டும் 48V மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன் வழங்க உள்ளது. மைல்ட் ஹைபிரிட் வசதி மூலம் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.

எம்ஜி ஹெக்டர் பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.16 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.96 கிமீ ஆகும்.

ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட மாடல்  170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அமைந்திருக்கும்.

எம்ஜியின் ஹெக்டர் எஸ்யூவியின் டீசல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.41 கிமீ ஆகும்.

பிரிவு ஹெக்டர் பெட்ரோல் ஹெக்டர் டீசல்
என்ஜின் 1.5 லிட்டர், டர்போ பெட்ரோல் 2.0 லிட்டர் டர்போ டீசல்
குதிரைத்திறன் 143hp 170hp
டார்க் 250Nm 350Nm
கியர்பாக்ஸ் 6-speed MT/6-speed dual-clutch AT 6-speed MT
48V mild-hybrid ஆப்ஷன் –
மைலேஜ் லிட்டருக்கு 14.16 கிமீ/13.96 கிமீ AT லிட்டருக்கு 17.41 கிமீ

குறிப்பாக இந்த எஸ்யூவி காரில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் தற்போது வழங்கப்படவில்லை.

MG ஹெக்டரின் ஸ்டைல்

F-35 ரக விமானத்தின் தோற்ற உந்துதலை பின்னணியாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரக மாடல் 4,655 மிமீ நீளம், 1835 மிமீ அகலம்,1760 மிமீ உயரம் மற்றும் 2750 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ள இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 192 மிமீ ஆகும். 587 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ஸ்பேஸ் இடம் பெற்றுள்ளது.

எம்ஜி ஹெக்டர்

முகப்பு தோற்றத்தில் எல்இடி ரன்னிங் விளக்குகளுடன், புராஜெக்டர் ஹெட்லைட் யூனிட், ஸ்டார் ரைடர் என அழைக்கப்படுகின்ற நேர்த்தியான மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில் கொண்டு அற்புதமாக விளங்குகின்ற இந்த எஸ்யூவி காரில் 17 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டுள்ள ஹெக்டரில் குறிப்பாக 10.4 அங்குல அகலம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ஓட்டுநருக்கான பல்வேறு தகவல்களை வழங்குகின்றது. பேனராமிக் சன் ரூஃப், 8 வண்ணங்களில் ஜொலிக்கும் மூட் லைட்ஸ் மற்றும் பவர் அட்ஜஸ்டபிள் இருக்கைகள் போன்றவற்றை பெற்றுள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி

இன்டர்நெட் சிறப்புகள்

Related Motor News

வெற்றிகரமான 6வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு எம்ஜி சலுகைகள்.!

ஆடம்பர வசதிகளுடன் எம்ஜி M9 எலெக்ட்ரிக் எம்பிவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2025

எம்ஜி வின்ட்சர் EV காரின் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்புகள்

இரண்டு எம்ஜி கார்களில் சிறப்பு எடிசன் விற்பனைக்கு வெளியானது

₹ 13.50 லட்சம் விலையில்‌ எம்ஜி வின்ட்சர் இவி விலை வெளியானது

BAAS திட்டத்தை காமெட் இவி, ZS EV என இரண்டுக்கும் விரிவுப்படுத்திய ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி

எம்ஜி iSMART எனப்படும் டெக் வசதி மூலம் ஏர்டெல் நிறுவன இ சிம் கார்டு ஆதரவுடன் முழுமையான ஸ்மார்ட் டெக் வசதிகளை பெற்ற முதல் இந்திய கார் மாடலாக இந்த எஸ்யூவி விளங்க உள்ளது. இந்த மாடலில் 5ஜி இணைய ஆதரவை பெறும் வகையில் அமைந்துள்ளது. M2M சிம் கார்டு என குறிப்பிடப்படும் மெஷின் டூ மெஷின் தொடர்பினை அதாவது  கார்களுக்கு இடையிலான தொடர்பை ஏற்படுத்தும் திறன் பெற்ற காராக விளங்குகின்றது.

இந்த காரில் 19 வகையாக பிரத்தியேக சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்ற சுருக்கமாக காணலாம்.

அவசரகால E-Call சேவை எனப்படுவது 24/7 முறையில் செயல்படும் பல்ஸ் ஹப் சேவை, காரை சுற்றி 360 டிகிரி கோணத்தில் படம்பிடித்து காண்பிக்கும் கேமரா, 16 ஜிபி இன்டரனல் ஸ்டோரேஜ்,காரின் இருப்பிடத்தை அறிவது, காரினை குறிப்பிட்ட எல்லையைக் கடந்தால் எச்சரிக்கும் அமைப்பு, வேக எச்சரிக்கை போன்றவற்றுடன் சர்வீஸ் தகவல்களை பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் i-smart

TomTom’s IQ நேவிகேஷன் சிஸ்டம், Gaana பிரீமியம் மியூசிக் ஸ்ட்ரீமிங் செயலி, AccuWeather செயலி உட்பட ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இணைப்பு அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் எனப்படும் அம்சங்களை உள்ளடக்கிய இந்த காரில் “Hello, MG” என்ற வார்த்தையுடன் இயக்கத்தை தொடங்கும் செயற்கை அறிவுத்திறன் மூலம் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆங்கில மொழி ஆதரவுடன் வழங்கியுள்ளது.

MG ஹெக்டர் எஸ்யூவி விலை எதிர்பார்ப்புகள்

ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் என நான்கு வேரியன்டுகளில் மொத்தமாக 13 வகையான வேரியன்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் வரவுள்ள இந்த எஸ்யூவி காரில் கருப்பு, சில்வர், வெள்ளை, கிளாஸ் ரெட் மற்றும் சிவப்பு என மொத்தம்  5 நிறங்களிலும் வரவிருக்கிறது.

இந்திய சந்தையில் பிரபலமாக விளங்குகின்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 500, டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் போன்ற மாடல்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்த வல்லதாக ஹெக்டர் விளங்க உள்ளது. புதிதாக விற்பனைக்கு வரவுள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கியா எஸ்பி எஸ்யூவி மாடலுக்கும் சவாலாகவும் அமைய உள்ளது.

ஜூன் மாதம் மத்தியில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரக மாடல் விலை ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி

Tags: MG HectorMG Motor
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 hyundai creta king

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

2025 Honda Elevate

2025 ஹோண்டா எலிவேட்டில் இன்டீரியர் மேம்பாடு மற்றும் கூடுதல் வசதிகள்

செப்டம்பர் 3ல் மாருதியின் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது

புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்

நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்

பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்

எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan