Automobile Tamilan

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்.யூ.வி கார் முக்கிய விபரம் இங்கே..!

ஜிஎம் நிறுவனத்தின் துனை நிறுவனமான எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் எஸ்.யூ.வி கார் மாடலாக எம்ஜி ஹெக்டர் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.  மே மாதம் இறுதியில் ஹெக்டர் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

மீண்டும் ஒரு டீசர் வீடியோ ஒன்றை எம்ஜி இந்தியா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முதன்முறையாக பல்வேறு இணைய ஆதரவு அம்சங்களை கொண்டதாக எஸ்யூவி விளங்க உள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்.யூ.வி கார் சிறப்புகள்

இந்தியாவில் பிரபலமாக உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 500 , நிசான் கிக்ஸ், டாடா ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸ் எஸ்யூவிகளுக்கு போட்டியாக புதிய ஹெக்டர் விளங்க உள்ளது. இந்த காரில் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் மல்டிஜெட் என்ஜின், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

காம்பஸ் எஸ்யூவி மாடலில் உள்ள 170 ஹெச்பி மற்றும் 350 என்எம் டார்க் வழங்கும் 2.0 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

149 ஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க் வழங்கும் 1.5 லிட்டர்  டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

ஹெக்டர் எஸ்யூவி முகப்பில் முன்புற கிரில் மிக நேர்த்தியான தேன்கூடு கிரில் கொண்டதாக உள்ள இந்த மாடல் ஸ்டைலிஷான க்ராஸ்ஓவர் ஆக விளங்குகின்றது. ரிமோட் கீலெஸ் என்ட்ரி கொண்டு , கூடுதலாக இன்டிரியரில் 10 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உட்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக உள்ளது. முதன்முறையாக ஹெக்டர் எஸ்யூவி காரில் இ-சிம் கார்டு வழங்கப்பட்டு , இணைய ஆதரவுடன் காரை பற்றி விபரங்கள், நிகழ்நேர போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கும்.

வரும் மே மாதம் இறுதி வாரத்தில் அல்லது ஏப்ரல் மாதம் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி வெளியாக உள்ளது.

Exit mobile version