புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அறிமுக தேதி அறிவிப்பு

0

MG Hector SUV

இந்தியாவின் பல்வேறு ஸ்மார்ட் நுட்பத்தினை பெற்ற முதல் எஸ்யூவி ரக எம்ஜி ஹெக்டர் மாடல் மே 15 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரில் இடம்பெற்றுள்ள எம்ஜி iSMART எனப்படும் டெக் வசதி மூலம் முழுமையான ஸ்மார்ட் டெக் வசதிகளை பெற்ற முதல் காராக விளங்க உள்ளது.

Google News

இந்தியாவில் கிடைக்கின்ற எக்ஸ்யூவி 500, ஹாரியர் , ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு மிகுந்த சவாலானதாக விளங்க உள்ள ஹெக்டர் காரில் 143 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்ற என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

எம்ஜி ஹெக்டர் சிறப்புகள்

சீனாவில் விற்பனை செய்யப்படுகின்ற Baujon 530 எஸ்யூவி மாடலை அடிப்படையாக கொண்ட இந்த எஸ்யூவி காரில் 143 ஹெச்பி குதிரைத்திறன் வழங்குகின்ற 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் என இரு விதமான தேர்வுகளுடன் கூடுதலாக 48 வோல்ட் ஹைபிரிட் ஆப்ஷனை பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ஐஸ்மார்ட்

பொழுதுபோக்கு அம்சங்கள் உட்பட அவசர கால தேவையை பூர்த்தி செய்யும் வசதிகள், வாகனத்தின் பராமரிப்பு சார்ந்த மேம்பாடுடன், நேவிகேஷன் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 10.4 அங்குல தொடுதிரை ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மேலும், M2M சிம் கார்டு என குறிப்பிடப்படும் மெஷின் டூ மெஷின் தொடர்பினை அதாவது  கார்களுக்கு இடையிலான தொடர்பை ஏற்படுத்தும் திறன் என 100 க்கு மேற்பட்ட கனெக்கட்டிவிட்டி அம்ங்களை பெற்றதாக வரவுள்ளது.

மே 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ஹெக்டர் எஸ்யூவி மாடலின் விற்பனை ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

MG Hector Rear view