எம்ஜி மோட்டாரின் முதல் எஸ்யூவி பெயர் : எம்ஜி ஹெக்டர்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மோட்டார் நிறுவனம் களமிறங்க உள்ள எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் முதல் எஸ்யூவி பெயர் எம்ஜி ஹெக்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MG Hector

வருகின்ற மே மாதம் விற்பனைக்கு வரவுள்ள எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் இந்திய மாடலாக எம்ஜி ஹெக்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தையில் செவர்லே நிறுவனம் வெளியேறிய பிறகு ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் அங்கமான சீனாவின் SAIC மோட்டார் வாயிலாக இங்கிலாந்து பிரண்டான எம்ஜி அறிமுகம் செய்யப்படுகின்றது.

இந்தியாவில் செவர்லே கார் நிறுவனம் மிகப்பெரிய வீழ்ச்சியை அடைந்தது. இதன் காரணமாக ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவிலிருந்து வெளியேறியது.

செவர்லே நிறுவனத்தின் ஹலோல் ஆலையை எம்ஜி மோட்டார் நிறுவனம் கையகப்படுத்தி , தனது மாடல்களை உற்பத்தி செய்ய உள்ளது. முதல் எஸ்யூவி மாடல் SAIC நிறுவனத்தின் மற்றொரு துனை நிறுவனமான Baojun வசமுள்ள Baojun 530, வூல்லீங் அல்மாஸ் எஸ்யூவி மாடலை அடிப்படையாக கொண்ட மாடலை முதல் எஸ்யூவி காராக MG Hector இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ஹெக்டர் எஸ்யூவி மாடலில் இடம்பெற உள்ள ஃபியட் நிறுவன 2.0 லிட்டர் டீசல் என்ஜின், இதன் போட்டியாளர்களான ஜீப் காம்பஸ் மற்றும் வரவுள்ள டாடா ஹேரியர் எஸ்யூவிகளில் இடம் பெற்றிருக்கும்.

மிக அகலமான டிஸ்பிளே பெற்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன், 360 டிகிரி கோணத்தில் காரை சுற்றியுள்ளவற்றை காணலாம்.

ரூ. 17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ள எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஹூண்டாய் டூஸான், ஜீப் காம்பஸ் போன்றவற்றை எதிர்கொள்ள உள்ளது.

Exit mobile version