Automobile Tamilan

எம்ஜி மோட்டாரின் முதல் பொது ஃபாஸ்ட் சார்ஜிங் மையம் திறப்பு

mg zs ev

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அடுத்த காராக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ZS EV காரை முன்னிட்டு தனது முதல் 50 கிலோ வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தை குருகிராமில் அமைந்துள்ள தனது டீலர் வாயிலாக ஃபோர்டம் என்ற ஃபின்லாந்தைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து துவங்கியுள்ளது.

மேலும் 6 ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை மும்பை, அகமதாபாத், பெங்களூரு மற்றும் ஹைத்திராபாத் போன்ற நகரங்களில் துவங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தனது முதல் இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை டிசம்பர் 5 ஆம் அறிமுகம் செய்ய உள்ளதை தொடர்ந்து ஜனவரி முதல் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது. CCS/CHAdeMO சார்ஜிங் தரத்துடன் இணக்கமான மின்சார பயனரின் வாகனங்கள் மற்றும் ஃபோர்டம் சார்ஜ் & டிரைவ் இந்தியாவில் அதன் மொபைல் ஆப் மூலம் பதிவு செய்வதன் மூலம் ஸ்மார்ட் சார்ஜர்களை அணுக முடியும் என குறிப்பிட்டுள்ளது.

முதல் சார்ஜிங் நிலையத்தை நிறுவி விழாவில் பேசிய எம்.ஜி. மோட்டார் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜீவ் சாபா, “இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் முன்னணியில் இருப்பதற்கான நோக்கத்துடன், போதுமான கட்டணம் வசூலிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து நிறுத்தங்களையும் நாங்கள் வடிவமைத்து வருகிறோம். எங்கள் முதல் EV வாடிக்கையாளர்களுக்கான உள்கட்டமைப்பு. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து ஆயுட்காலம் வரை, எலெக்ட்ரிக் கார்களுக்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதே எங்கள் முயற்சி, முதல்  முறையாக பொது வேகமான சார்ஜரை நிறுவுவது நோக்கத்தின் முதல் பெரிய படியாகும். MG ZS EV கார் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் அதிக மின்சார வாகனங்களை சாலையில் வைத்திருப்பது அரசாங்கத்தின் நீண்டகால நோக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ” என குறிப்பிட்டுள்ளார்.

ZS EV மாடலில் பொருத்தப்பட்டுள்ள 44.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குடன் கூடிய மின்சார மோட்டார் அதிகபட்சமாக 143 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 350 என்எம் டார்க் வழங்குவதுடன், NEDC சான்றிதழ் படி அதிகபட்சமாக 300 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும். இந்த பேட்டரியை 7kW AC சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும் போது அதிகபட்சமாக 7 மணி நேரமும், 50kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 80 சதவீத சார்ஜிங்கை வெறும் 40 நிமிடங்களில் மேற்கொள்ளும் திறனை கொண்டிருக்கும்.

Exit mobile version