மீண்டும் ஹெக்டர் எஸ்யூவி முன்பதிவை அக்டோபரில் தொடங்கும் எம்ஜி மோட்டார்

mg hector suv launched price

எம்ஜி மோட்டார் இந்தியாவின் முதல் எஸ்யூவி ரக மாடலான ஹெக்டர் விற்பனைக்கு வந்த இரு மாதங்களில் 3,500 க்கு மேற்பட்ட டெலிவரியுடன் 28,000 க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றிருந்த நிலையில் தற்காலிகமாக எம்ஜி நிறுவனம் முன்பதிவை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் மீண்டும் முன்பதிவை அக்டோபர் மாத தொடக்க வாரங்களில் முன்பதிவு தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஹாலால் ஆலையில் இந்நிறுவனம் சமீபத்தில் 5,000 யூனிட் உற்பத்தியை கடந்துள்ளது. மேலும் முதல் இரு மாதங்களில் 3,500க்கு மேற்பட்ட வாகனங்கள் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் உற்பத்தியை அதிகரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது. கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.

2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட ஹெக்டர் டீசல் மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் உடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.

ஹெக்டர் எஸ்யுவி பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.16 கிமீ (மேனுவல்), ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.96 கிமீ மற்றும் பெட்ரோல் ஹைபிரிட் வேரியன்ட் மைலேஜ் லிட்டருக்கு 15.91 கிமீ ஆகும்.

எம்ஜி மோட்டாரின் ஹெக்டர் டீசல் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.41 கிமீ ஆகும்.

எம்ஜி ஹெக்டர் விலை பட்டியல்

விற்பனைக்கு முன்பாக 28,000 அதிகமான முன்பதிவுகளை பெற்றுள்ளது. மேலும் 11,000 க்கு அதிகமான நபர்களால் டீலர்கள் மூலம் முன்பதிவுக்காக காத்திருக்கின்றனர். எனவே மீண்டும் முன்பதிவு தொடங்குவது உறுதியாகியுள்ளது. எம்ஜி ஹெக்டர் அறிமுக விலை ரூ.12.18 லட்சம் ஆகும்.

உதவி – ஆட்டோகார் இந்தியா

Exit mobile version