Automobile Tamilan

262 கிமீ ரேஞ்சு.., எம்ஜி இசட்எஸ் EV, இசட்எஸ் பெட்ரோல், ஹைபிரிட் அறிமுக விபரம்

எம்ஜி eZS எஸ்யூவி

எம்ஜி மோட்டார் நிறுவனம், முன்பே 262 கிமீ ரேஞ்சு தரவல்ல எம்ஜி இசட்எஸ் மின்சார காரை உறுதி செய்துள்ள நிலையில், இந்தியாவில் தற்பொழுது இசட்எஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் ஹைபிரிட் வேரியண்டுகளை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக முக்கிய ஆவணம் ஒன்று கசிந்துள்ளது.

ஹெக்டர் எஸ்யூவி காருக்கு கிடைத்துள்ள வரவேற்பினை தொடர்ந்து இந்நிறுவனம் வெளியிட உள்ள எம்ஜி ZS EV மாடல் டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில், அடுத்து பிஎஸ்6 ஆதரவை பெற்ற 106 ஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ சார்ஜிங் பெட்ரோல் மற்றும் பேட்டரி இணைக்கப்பட்டு அதிகபட்சமாக 111 ஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்றது.

எலெக்ட்ரிக் ZS மாடலில் பொருத்தப்பட்டுள்ள 44.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குடன் கூடிய மின்சார மோட்டார் அதிகபட்சமாக 150 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 350 என்எம் டார்க் வழங்குவதுடன், NEDC சான்றிதழ் படி அதிகபட்சமாக 262 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும். இந்த பேட்டரியை 7kW AC சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும் போது அதிகபட்சமாக 7 மணி நேரமும், 50kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 80 சதவீத சார்ஜிங்கை வெறும் 40 நிமிடங்களில் மேற்கொள்ளும் திறனை கொண்டிருக்கும்.

இந்தியாவில் முதன்முறையாக 50kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை முன்னணி மெட்ரோ நகரங்களில் Fortum என்ற நிறுவனத்துடன் இணைந்து ஏற்படுத்த எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. இதுதவிர, இந்நிறுவனம் டெல்லி ஸ்டார்ட் அப் நிறுவனமான இசார்ஜ் பே மூலம் இணைந்து சார்ஜிங் மையங்களை ஏற்படுத்தவும், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்துடனும் செயற்படுத்த உள்ளது.

டிசம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள எம்ஜி இசட்எஸ் EV காரை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் வேரியண்டுகளும் வெளியாகலாம்.

Exit mobile version