உற்பத்திக்கு தயாராகும் மிச்செலின் ஏர்லெஸ் டயர் விபரம் வெளியானது

Michelin Uptis

இனி., பஞ்சர் என்ற பேச்சுக்கே இடமில்லை என நிருபிக்கும் மிச்செலின் Uptis டயர்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. 2024 ஆம் ஆண்டு முதல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன கார்களுக்கு என மிச்செலின் ஏர்லெஸ் டயர்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஜிஎம் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மற்றும் தானியங்கி கார்களுக்கு என இந்த டயர்கள் தயாரிக்கப்பட உள்ளது. 2005 ஆம் ஆண்டு முதன்முறையாக மிச்செலின் நிறுவனம் ட்வீல் (Tweel) என்ற பெயரில் இந்த டயர்களை காட்சிபடுத்தியது. பின்பு புல்வெட்டும் இயந்திரம் மற்றும் ஸ்கிட்ஸ்டீர் போன்ற வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட்டது.

மிச்செலின் Uptis

மிச்செலின் நிறுவனம், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ள ஏர்லெஸ் டயருக்கு Uptis என பெயரிடப்பட்டுள்ளது. Uptis என்பதன் விளக்கம் Unique Puncture-proof Tyre System ஆகும்.

டயர் பஞ்சர் மற்றும் வெடிப்பது போன்றவற்றில் இருந்து விடுதலை அளிக்கின்ற இந்த நுட்பம் மிகவும் சிறப்பானதாகும் குறிப்பாக இந்த டயர்களில் வழங்கப்பட்டுள்ள ஸ்போக்ஸ்கள் மிகவும் வளைந்து நெளியும் தன்மை கொண்டதாகும்.

பல்வேறு மோட்டார் வாகன நிறுவனங்களுடன் இணைந்து மிச்செலின் இந்த டயர் உற்பத்திக்கு செயல்வடிவத்தை பெற உள்ள நிலையில், முதன்முறையாக இந்த டயரை பயன்படுத்தும் நிறுவனமாக ஜெனரல் மோட்டார்ஸின் செவர்லே போல்ட் எலக்ட்ரிக் கார்கள் மற்றும் செவர்லே போல்ட் ஏவி (தானியங்கி) கார்களில் பொருத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டயர்கள் பராமரிப்பு இல்லாத ஒன்றாக விளங்கும்.

2024 ஆம் ஆண்டு முதல் உற்பத்திக்கு செல்ல உள்ள அப்டைஸ் டயர்களை ஜெனரல் மோட்டார்ஸ் பயன்படுத்த உள்ளது. மேலும் மிச்செலின் அறிக்கையில், தற்போது விற்பனையில் உள்ள டயர்களில் ஆண்டிற்கு 200 மில்லியன் டயர்கள் தேய்மானத்திற்கு முன்பாகவே பஞ்சர், வெடிப்பு, சாலைகளினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் முறையற்ற தேய்மானம் போன்ற காரணங்கள் பயன்படுத்த முடியாமல் வீணாகுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version