இந்தியாவில் மினி JCW ப்ரோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் ரூபாய் 43.90 லட்சத்தில் மினி ஜான் கூப்பர் வொர்க்ஸ் ப்ரோ (John Cooper Works pro) எடிசன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா இ-காமர்ஸ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மினி JCW ப்ரோ எடிசன்

இந்தியாவில் பிஎம்டபிள்யூ பிராண்டின் கீழ் செயல்படும் மினி  ஜேசிடபிள்யூ ப்ரோ மாடல்கள் 20 கார்களை மட்டுமே விற்பனை செய்ய உள்ள நிலையில், இதற்கான முன்பதிவு பிரத்யேகமாக அமேசான் இந்தியா இணையதளத்தில் மட்டுமே செய்யப்பட உள்ளது.

JCW என்றால் John Cooper Works என்பது விளக்கமாகும்.

20 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள ஜேசிடபிள்யூ எடிசனில் அதிகபட்சமாக 208hp ஆற்றல் மற்றும் 300 Nm டார்க்கினை வழங்கும் 4 சிலிண்டர்களை பெற்ற 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருதப்பட்டுள்ளது. இது சாதாரண மாடலை விட கூடுதலான ஆற்றலை பெறும் வகையில் JCW கிட் வாயிலாக கூப்பர் எஸ் மாடலை விட 18hp ஆற்றல் மற்றும் 20Nm டார்க் வழங்குகின்றது.

இந்த மாடலில் பவரை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்று கூடுதலாக க்ரீன், மிட் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று விதமான மோட்களை பெற்றுள்ளது.

மிட்நைட் பிளாக் மற்றும் பிரிட்டிஷ் ரேசிங் க்ரீன் ஆகிய நிறங்களுடன் கிடைக்க உள்ள மினி JCW ப்ரோ எடிசன் 17 அங்குல அலாய் வீல், வட்ட வடிவ எல்இடி விளக்குகள், JCW Pro இருக்கைகள், பேட்ஜ்,  360W  ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

ஜேசிடபிள்யூ ப்ரோ எடிசன் மாடலின் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் இரட்டை காற்றுப்பை, ஏபிஎஸ், கார்னிங் சென்சார், பிரேக் அசிஸ்ட் ஆகியவற்றை கொண்டதாக வந்துள்ளது.

20 அலகுகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. இவை அனைத்தும் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ளது. இந்தியாவில் மினி JCW ப்ரோ எடிசன் ரூ.43.90 லட்சத்தில் கிடைக்க தொடங்கியுள்ளது.

Recommended For You