Site icon Automobile Tamil

அறிமுகமானது மினி ஆக்ஸ்போர்ட் எடிசன்; விலை ரூ. 44.9 லட்சம்

சிறிய அளவிலும் அதிக திறன் கொண்ட இன்ஜின்களை தயாரிப்பதால் உலகளவில் பிரபலமடைந்துள்ள பிரிட்டனை சேர்ந்த மினி நிறுவனம், குறைந்த எண்ணிகையிலான ஆக்ஸ்போர்ட் எடிசன் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த கார்கள் மொத்தமாக 25 யூனிட்கள் மட்டுமே வெளியாக உள்ள இந்த கார்களுக்கான புக்கிங் பிரத்தியோகமாக அமேசான் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. மூன்று-டோர் எஸ் வகை கார்கள் மட்டுமே விற்பனை வர உள்ளது. மேலும் இந்த காரின் விலை விலை ரூ. 44.9 லட்சம் (எக்ஸ் ஷோரூம் விலை)

இந்த கார்கள் சோலாரிஸ் ஆரஞ்சுகளுடன், ஜெட் பிளாக் அக்ஸ்ன்ட்ஸ் (ரூப் மற்றும் மிரார் கேப்கள்) மற்றும் மிட்நைட் பிளாக்களுடன் சோலாரிஸ் ஆரஞ்சு அக்ஸ்ன்ட்ஸ் (ரூப் மற்றும் மிரர் கேப்கள்) என இரண்டு வெளிப்புற கலர்களில் கிடைக்கும். மேலும் இந்த காரில் 17-இன்ச் டிராக் ஸ்போக் பிளாக் வீல்கள் டயர்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ‘OXFORD’ என்ற எழுத்துகள் 3D முறையில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இன்டீரியர் ஸ்போர்ட்ஸ் பியானோ பிளாக் யூனியன் ஜாக் டிசைனில் வடிவில் பிரிட்டன் இன்ஜினியர்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரின் உள்புறத்தில் 8.8-இன்ச் டச் ஸ்கிரீன்களுடன் டச்பேடு கண்ட்ரோல், நேவிகேஷன் சிஸ்டம், மினி கனேக்டடு XL, டெலிபோனி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்கும். ஆப்பிள் கார்பிளே மற்றும் 360-வாட், 12 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஸ்பீக்கர் சிஸ்டம்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த கார்கள் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்களை கொண்டிருக்கும். இந்த இன்ஜின்கள் 7 ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட்ஸ், கிரீன் என பல்வேறு டிரைவிங் மோட்களுடன் விற்பனைக்கு வர உள்ளது. மேலும் இந்த கார்கள் 100 km/hr -ஐ எட்ட வெறும் 6.7 செகண்ட்டுகளே எடுத்து கொள்ளும்

Exit mobile version