Site icon Automobile Tamilan

இன்று வெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ 2018

கடந்த 2015 ஜனவரிக்கு பின்னர் ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்ட்ரோ பெயர்பலகையை மீண்டும் அதிகாரப்பூர்வமாக இன்று அறிமுகம் செய்துள்ளது . சிறியளவு குடும்பத்தினரின் சிறந்த தேர்வாக விளங்கி வரும் சாண்ட்ரோ கார்கள் மீண்டும் அறிமுகமாகியுள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புதிய பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்கள், அளவிலும் பெரியதாக இருக்கிறது.

புதிய சாண்ட்ரோ கார்களில் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம், ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே , ரிவர்ஸ் கேமரா, ஸ்டீர்யரிங் மவுண்டட் ஆடியோ கண்ட்ரோல், ரியர் ஏசி வென்ட் மற்றும் பார்க்கிங் சென்சார் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரை, ஆண்டி லாக் பிரேக் மற்றும் டிரைவர் சைட் ஏர்பேக்ஸ்கள் வழக்கம் போலவே இடம் பெற்றுள்ளது. மேலும் டாப் டிரிம்களில் டூயல் எர்பேக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

புதிய சாண்ட்ரோ 2018 மாடல்கள் மறு சீரமைப்பு செயப்பட்ட வெர்சனாக வெளியாகியுள்ளது. இதில் 1.1 லிட்டர் எப்ச்சலான் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை சாண்ட்ரோ ஜிங் கார்களில் உள்ளதை போன்று இருக்கும். நான்கு சிலிண்டர்களுடன் கூடிய இன்ஜின்கள் 69PS ஆற்றலை உண்டாக்குவதுடன் 99Nm டார்க்யூ-வை கொண்டிருக்கும். இதில் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட CNG ஆப்சனாக உள்ளது. இந்த இன்ஜின்கள் 58PS மற்றும் 84Nm டார்க்யூ-வை கொண்டிருக்கும். இந்த இன்ஜின்கள் 5-ஸ்பீட் மெனுவல் மற்றும் 5-ஸ்பீட் AMT பொருத்தப்பட்டிருக்கும். இந்த காரின் விலைகள் 3.4 லட்சம் முதல் 5.5 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம் விலை). இந்த காரை வாங்க காத்திருக்கும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களில் முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version