தார் எஸ்யூவிக்கு கிடைத்த எதிர்பாராத வரவேற்பு தினறும் மஹிந்திரா

0

mahindra thar suv first look

இந்தியாவின் பிரத்தியேகமான ஆஃப் ரோடு எஸ்யூவி காராக அறியப்படுகின்ற மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் முன்பதிவு எண்ணிக்கை 20,000 கடந்துள்ளதை தொடர்ந்து, பேஸ் வேரியண்டுகளான AX அடிப்படையிலான பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Google News

பிரபலங்கள் முதல் பெரும்பாலானோர் மத்தியில் தார் எஸ்யூவி மீதான கவனம் திரும்பியுள்ளதால் டாப் வேரியண்ட் LX ஆட்டோமேட்டிக் காத்திருப்பு காலம் 7 மாதங்களாக அதிகரித்துள்ளது. எனவே, ஆரம்ப நிலை வேரியண்டுகளுக்கும் முன்பதிவு அதிகரப்பதனால் AX அடிப்படையிலான ஆப்ஷனல் வேரியண்ட் முதல் மட்டும் முன்பதிவு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.

தற்போது மஹிந்திராவின் நாசிக் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற தார் எஸ்யூவி மாதந்திர உற்பத்தி எண்ணிக்கை 2000 யூனிட்டிலிருந்து 3000 யூனிட்டாக உயரத்த உள்ளது. எனவே, விரைவாக டெலிவரி வழங்குவதற்கான முயற்சிகளை மஹிந்திரா மேற்கொண்டு வருகின்றது.

தார் எஸ்யூவி இன்ஜின்

தார் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள 2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 5000 RPM-ல் 150 ஹெச்பி பவர் மற்றும் 1500-3000rpm-ல் 320 என்எம் டார்க் (ஆட்டோமேட்டிக்) மற்றும் 1250-3000rpm-ல் 300 என்எம் டார்க் (மேனுவல்) வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

அதிகபட்சமாக 3750 RPM -ல் 130 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை 1600 – 2800 RPM -ல் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

மேலும் அனைத்து வேரியண்டிலும் மேனுவல் ஷிஃப்ட் 4×4 டிரான்ஸ்ஃபர் கேஸ் வழங்கப்பட்டுள்ளது.

web title :  New Mahindra Thar AX bookings paused