Automobile Tamil

2019 மாருதி சுசூகி வேகன் ஆர் கார் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

 

வரும் 23ந் தேதி வெளியாக உள்ள மாருதி சுசூகி கார் தயரிப்பாளரின், புதிய 2019 மாருதி சுசூகி வேகன் ஆர் படங்கள், என்ஜின் விபரம், நுட்ப விபரம் , வேரியன்ட் உட்பட மேலும் பல விபரங்கள் வெளியாகியுள்ளது.

மாருதி சுசூகி வேகன் ஆர்

சுசூகி நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Heartect பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மாடலாக விளங்குகின்றது. புதிய வேகன்ஆர் காரின் எடை முந்தைய மாடலை விட சுமார் 65 கிலோ கிராம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள பிரவுச்சர் மூலம் தெரிய வந்துள்ளது. சராசரியாக மாதந்தோறும் 11,000 கார்களுக்கு கூடுதலாக விற்க்கப்படுகின்ற மாருதி சுசூகி வேகன் ஆர் இனி புதிய சாதனையை படைக்கலாம் என கருதப்படுகின்றது.

சமீபத்தில் வெளியான காரின் புகைப்படங்களில் வாயிலாக முந்தைய மாடலின் முகப்பு டிசைனை விட சிறிய அளவிலான மாற்றங்களை பெற்று புதிய பம்பர் கிரில், அகலமான ஏர்டேம் , வட்ட வடிவ பனி விளக்கு அறை வழங்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டு தோற்ற அமைப்பில் பெரிதாக மாற்றம் இல்லாமல் பி மற்றும் சி பில்லர்களில் வழங்கப்பட்டுள்ள கருமை நிறம், பலேனோ, ஸ்விஃப்ட் கார்களை போன்று மிதக்கும் தோற்றத்தை வழங்கும் மேற்கூறையாக காட்சியளிக்கின்றது. பின்புறத்தில் செங்க்குத்தான எல்இடி டெயில் விளக்கு பெற்றதாக விளங்குகின்றது.

வேகன்-ஆர் காரின் நீளம் விற்பனையில் உள்ள மாடலை விட சுமார் 65 மிமீ அதிகரிக்கப்பட்டு  3655 மில்லி மீட்டர் நீளம் பெற்றுள்ளது. அகலம் 145 மிமீ அதிகரிக்கப்பட்டு 1620 மிமீ ஆகவும், ஆனால் வாகனத்தின் உயரம் 25 மிமீ குறைக்கப்பட்டு 1625 மிமீ ஆக உள்ளது.

குறிப்பாக தாரளமான இடவசதியை வழங்கும் நோக்கில் வீல்பேஸ் 35 மிமீ ஆக அதிகரிக்கப்பட்டு 2435 மிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பூட் ஸ்பேசில் கூடுதலான இடவசதியை வழங்கும் நோக்கில் 340 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் விற்பனையில் உள்ள மாடலில் 172 லிட்டர் மட்டும் கொண்டிருந்தது. புதிய வேகன்-ஆர் மாடலில் நீலம், ஆரஞ்சு நிறங்கள் புதிதாக இணைக்கப்பட்டு வெள்ளை, சில்வர், கிரே மற்றும் பிரவுன் என மொத்தமாக 6 நிறங்களில் கிடைக்க உள்ளது.

மாருதி வேகன்-ஆர் இன்டிரியர்

முந்தைய மாடலை விட முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட இரு நிற கலவையிலான டேஸ்போர்டினை பெற்று விளங்கும் இந்த காரில் வீல்பேஸ் அதிகரிக்கப்பட்டு கூடுதல் இடவசதி ஏற்படுத்தபட்டுள்ளது. இதன் காரணமாக மிக தாரளமான இடவசதியை பெற்று தருகின்றது.

இந்த காரில் உள்ள டாப் வேரியன்டில் 7 இன்ச் தொடுதிரை ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி, புளூடூத் , யூஎஸ்பி தொடர்பு, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் , கீலெஸ் என்ட்ரி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளை கொண்டிருக்கின்றது.

முந்தைய மாடலை காட்டிலும் கூடுதல் வசதிகளை பெற்றுள்ள புதிய மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் அடிப்படையாக டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்றவற்றை இணைத்திருக்கின்றது.

வேகன் ஆர் என்ஜின்

விற்பனையில் உள்ள மாடல்கள் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பெற்றிருந்த நிலையில் தற்போது மொத்தமாக இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வை பெற்றதாக வேகன் ஆர் வெளியிடப்பட உள்ளது. ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டிலும் கிடைக்கின்றது.

புதிதாக K12M 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இதைத் தவிர K10B 1.0 லிட்டர் 67 bhp பவர் மற்றும் 90 NM டார்க் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி வேகன் ஆர் காரில் சிஎன்ஜி தேர்வு கூடுதலாக இணைக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக இடம்பெறுகின்றது.

வேகன் ஆர் வேரியன்ட் விபரம்

புதிதாக வெளியாகவுள்ள 2019 வேகன் ஆர் காரில் இரண்டு பெட்ரோல் என்ஜின்களுக்கும் சேர்த்து மொத்தம் 7 வேரியன்ட்களில் கிடைக்க உள்ளது. 1.0 லிட்டர் என்ஜின் தேர்வில் LXi, VXi மற்றும் VXi AGS போன்ற பேஸ் வேரியன்டில் மட்டும் கிடைக்க உள்ளது.

1.2 லிட்டர் என்ஜின் VXi , VXi AGS, ZXi மற்றும் ZXi AGS போன்ற வேரியன்டில் மட்டும் கிடைக்க உள்ளது.

குறிப்பு – AGS எனப்படுவது  Automatic Gear Shift (ஏஎம்டி) ஆகும்.

வேரியன்ட் வாரியாக முக்கிய வசதிகள்

வேகன் ஆர்  LXi

1.0 லிட்டர் என்ஜின்

5 வேக மேனுவல் கியர்பாக்ஸ்

13 அங்குல ஸ்டீல் வீல்

ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி

ரியர் பார்க்கிங் சென்சார்

சீட் பெல்ட் ரிமைன்டர்,

ஸ்பீடு அலெர்ட்

சென்டரல் லாக்கிங் சிஸ்டம்

வேகன் ஆர்  VXi

1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் என்ஜின்

5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ்

14 அங்குல ஸ்டீல் வீல் மற்றும் வீல் கவர்

ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி

ரியர் பார்க்கிங் சென்சார்

சீட் பெல்ட் ரிமைன்டர்,

ஸ்பீடு அலெர்ட்

சென்டரல் லாக்கிங் சிஸ்டம்

கீலெஸ் என்ட்ரி

ஆடியோ சிஸ்டம் மற்றும் புளூடூத் தொடர்பு

வேகன் ஆர்  ZXi

1.2 லிட்டர் என்ஜின்

5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ்

14 அங்குல ஸ்டீல் வீல் மற்றும் வீல் கவர்

டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி

7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

ரியர் டீஃபோகர்

பனி விளக்கு

டேக்கோ மீட்டர்

ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ

வேகன் ஆர் பாதுகாப்பு அம்சங்கள்

வரும் 2020 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரவுள்ள பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு அம்சத்தை பெற்றுள்ள காராக விளங்க உள்ள வேகன்ஆர்-யில் ரியர் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைன்டர், டூயல் ஏர்பேக் , ஏபிஎஸ், இபிடி போன்றவை இணைக்கப்பட்டிருக்கின்றது. இந்த காரின் முன் டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

வேகன்-ஆர் போட்டியாளர்கள்

புதிதாக வரவுள்ள மாருதி சுசூகி வேகன் ஆர் காருக்கு போட்டியாக டட்சன் கோ, ஹூண்டாய் சான்ட்ரோ, டாடா டியாகோ, மற்றும் மாருதி செலிரியோ போன்ற கார்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டிருக்கின்றது.

புதிய மாருதி சுசூகி வேகன்-ஆர் விலை

வருகின்ற  ஜனவரி 23, 2019 யில் வெளியாக உள்ள மாருதி சுசுகி வேகன் ஆர் கார் விலை ரூ. 4.50 லடசத்தில் தொடங்கி ரூ. 6.80 லட்சத்திற்குள் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Maruti Suzuki Wagon R image gallery

Exit mobile version