மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி சிறப்புகள்

நாட்டின் முதன்மையான தயாரிப்பாளரின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் பெட்ரோல் என்ஜின் கொண்டதாக வந்துள்ள நிலையில் மாருதி சுசுகி தனது போட்டியாளர்களை எவ்வாறு எதிர்கொள்கின்றது மற்றும் இதன் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார்களுக்கு இடையே கடுமையான சவால் உள்ள நிலையில் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி இதுவரை 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பெற்றிருந்த நிலையில் இப்போது பிஎஸ்6 முறைக்கு மாற்றப்படுவதனால் இனி பெட்ரோல் என்ஜினில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. முந்தைய மாடலை விட மிகவும் ஸ்டைலிஷான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்டிரியரில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை.

ஸ்டைலிங்

முன்பாக விற்பனை செய்யப்பட்ட மாடலை விட வெளிப்புற தோற்றம் மிகவும் ஸ்டைலிஷாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது புதுப்பிக்கப்பட்ட க்ரோம் கிரிலுடன், எல்இடி ஹெட்லைட், பனி விளக்கு அறையின், பேனல்கள் மற்றும் பம்பர் போன்வை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

காரின் பக்கவாட்டு தோற்றத்தை பொறுத்தவரை தற்போது பெரிய அளவில் வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் பின்புற அமைப்பிலும் பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லை. ஆனால், புதுப்பிக்கப்பட்ட பம்பர் மற்றும் கூடுதலாக எல்இடி டெயில்விளக்கினை பெற்றுள்ளது.

இன்டிரியர்

பொதுவாக போட்டியாளர்களை விட இந்த காரானது இன்டிரியரில் பெருமளவு பிரீமியம் வசதிகள் பெறாத நிலையில் உள்ளது. குறிப்பாக, தற்போது விற்பனைக்கு கிடைத்து bs4 மாடலை போன்றே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு மாருதியின் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, ரிவர்ஸ் கார் பார்க்கிங், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்றவற்றை மட்டும் பெற்றுள்ளது. மற்றபடி எவ்விதமான கனெக்ட்டிவிட்டி வசதிகளையும் இந்த கார் வென்யூ போல பெறவில்லை.

328 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ஸ்பேஸ், தாராளமான இருக்கை வசதி மற்றும் இடவசதி வழங்கப்பட்டுள்ளது. இன்டிரியரில் கூடுதலான வசதிகளை ஏற்படுத்தி இருந்தால் இந்த காருக்கு ஒரு மிகப்பெரிய பலமாக அமைந்து இருக்கும் ஆனால் அவ்வாறு எந்த மாற்றங்களும் கொடுக்கப்படவில்லை.

என்ஜின்

முன்பாக டீசல் என்ஜின் பெற்றிருந்த நிலையில் இப்போது பெட்ரோல் என்ஜின் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. சியாஸ் உட்பட எர்டிகா, எக்ஸ்எல்6 போன்ற கார்களில் பணியாற்றுகின்ற இந்த என்ஜின் மிக சிறப்பானவகையில் பயணத்தை மேற்கொள்ள உதவுகின்றது.

பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு ஆதரவான 1.5 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர், 138 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் SHVS ஹைபிரிட் நுட்பத்துடன் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்டுள்ளது.

மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா காரின் பெட்ரோல் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 17.03 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 18.76 கிமீ ஆகும். இது நிகழ் நேரத்தில் இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 14 கிமீ முதல் 16 கிமீ வரை வழங்கும். நல்ல பெர்ஃபாமென்ஸ் மற்றும் ஆரம்ப நிலை பிக்கப் சிறப்பாகவே உள்ளது. முந்தைய மாடலை விட சஸ்பென்ஷன் அமைப்பில் மேம்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு வசதிகள்

சர்வதேச என்சிஏபி மையத்தால் சோதனை செய்யப்பட்ட மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 4 நட்சத்திர மதீப்பீட்டை பெற்றிருந்தது. ஆனால் போட்டியாளாரான எக்ஸ்யூவி300 5 நட்சத்திரமும், டாடா நெக்ஸான் 5 நட்சத்திரமும் பெற்றுள்ளது.

புதிய விட்டாரா பிரெஸ்ஸா இரட்டை முன்பக்க ஏர்பேக், இபிடியுடன் ஏபிஎஸ், சீட்-பெல்ட் நினைவூட்டல், அதிவேக எச்சரிக்கை மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்றவை அனைத்து வேரியண்டிலும் வழங்குகிறது.

போட்டியாளர்கள்

சமீபத்தில் வெளியான ஹூண்டாய் வென்யூ உட்பட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், எக்ஸ்யூவி 300, டாடா நெக்ஸான், வரவுள்ள கியா சோனெட் போன்ற மாடல்களை 2020 சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா எதிர்கொள்ள உள்ளது.

2020 விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விலை பட்டியல்

போட்டியாளர்களை விட குறைவான வசதிகள், டீசல் என்ஜின் இல்லை போன்ற காரணங்கள் இருந்தாலும், மாருதியின் பிராண்ட மதிப்பு மிகப்பெரிய பலமாக விட்டரா பிரெஸ்ஸா காருக்கு வழங்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

Maruti Brezza BS6 Petrol விலை
Lxi ரூ.7,34,000
Vxi ரூ.8,35,000
Zxi ரூ.9,10,000
Zxi+ ரூ.9,75,000
Vxi AT SHVS ரூ.9,75,000
Zxi+ Dual Tone ரூ.9,98,000
Zxi AT SHVS ரூ.10,50,000
Zxi+ AT SHVS ரூ.11,15,000
Zxi+ AT Dual Tone ரூ.11,40,000

(எக்ஸ்-ஷோரூம் விலை )

Exit mobile version