Automobile Tamilan

இந்தியாவில் மிட்ஷூபிசி அவுட்லேண்டர் எஸ்யூவி களமிறங்குகின்றது

சர்வதேச அளவில் 2015 நியூயார்க் மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்ட புத்தம் புதிய மிட்ஷூபிசி அவுட்லேண்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வருவதனை மிட்ஷூபிசி இணையதளத்தில் டீசர் செய்யப்பட்டுள்ளது.

மிட்ஷூபிசி அவுட்லேண்டர் எஸ்யூவி

நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய சந்தையிலிருந்து நீக்கப்பட்ட அவுட்லேண்டர் எஸ்யூவி மாடல் மீண்டும் இந்திய சந்தைக்கு வருவதனை தனது அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் டீசர் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக எஸ்யூவி சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகின்ற சூழ்நிலையில் சமீபத்தில் வெளிவந்த ஜீப் காம்பஸ், ஹோண்டா சிஆர்-வி மற்றும் ஹூண்டாய் டூஸான் போன்றவற்றுக்கு எதிராக நிலை நிறுத்தப்படவும் எண்டேவர், ஃபார்ச்சூனர் மற்றும் டீகுவான் போன்றவற்றுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தோற்றம்

முகப்பு தோற்றம் முற்றிலும் அழகான தோற்றத்தில் எக்ஸ் வடிவ கிரிலுடன் ஏரோடைனமிக்ஸ் அடிப்படையில் இரண்டு குரோம் பூச்சூ ஸ்லாட்களுக்கு மத்தியில் மிட்சுபிஷி இலச்சினை பதிக்கப்பட்டுள்ளது. முகப்பு பம்பர் மற்றும் பனி விளக்குகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. எல்இடி முகப்பு விளக்குகள் பின்புறத்திலும் எல்இடி நிறுத்த விளக்குகள் பயன்படுத்தியுள்ளனர்.

பக்கவாட்டு தோற்றம் மேம்படுத்தியுள்ளனர். 18 இஞ்ச் ஆலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறத்திலும் புதுப்பிக்கப்பட்ட பம்பர் லைசன்ஸ் பிளேட்டுக்கு மேல் குரோம் பூச்சு சேர்க்கப்படுள்ளது.

இன்டிரியர்

7 இருக்கைகள் கொண்ட அவுட்லேண்டர் காரின் உட்ப்புறத்தில் புதிய தொடுதிரை இன்ஃபோன்டெயின்மென்ட் , புதிய ஸ்டீயரீங் வீல் , அப்ல்சரி , பின்புற இருக்கைகள் ஃபோல்டிங் வசதி போன்றவை இணைக்கப்பட்டுள்ளது.

என்ஜின்

சர்வதேச அளவில் 2.4 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் பெட்ரோல் என இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனில் அவுட்லேண்டர் எஸ்யூவி கிடைக்கின்றது. ஆனால் இந்தியா வரக்கூடிய எஞ்சின் ஆப்ஷன் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
2.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 166 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதே என்ஜின் வகையில் இந்தியாவில் கிடைக்கும். மேலும் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் 224எச்பி ஆற்றலை தரும். சிவிடி ஆப்ஷனில் வரவுள்ளதை மிட்ஷூபிசி உறுதிசெய்துள்ளது.
வருகை மற்றும் விலை
புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் ரூ.23 லட்சம் விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Exit mobile version