2019 ரெனோ க்விட் காரின் படங்கள் வெளியானது

Renault Kwid facelift spy

பல்வேறு மாற்றங்களை பெற்ற 2019 ரெனோ க்விட் காரின் வெளிப்புறம் மட்டுமல்லாமல் இன்டிரியர் சார்ந்த சில படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது. டீலர்களை வந்தடை தொடங்கி விட்டதால் அக்டோபர் முதல் வாரத்தில் விற்பனைக்கு வெளியிடப்படலாம். சமீபத்தில் வெளியான ரெனோ ட்ரைபரின் இன்டிரியர் அமைப்பில் உள்ள 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உட்பட டேஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் தொடர்ந்து பாரத் ஸ்டேஜ் 4 நடைமுறையுடன் விற்பனைக்கு வெளியாக உள்ளது. இந்த என்ஜின் 54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் 0.8L கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.

67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும். ஏப்ரல் 2020 க்கு முன்பாக பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்பட உள்ளது.

மிக ஸ்டைலிஷான ஹெட்லைட் யூனிட், முன்புற பம்பர் மற்றும் கிரில் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பெரிதாக எந்த மாற்றும் இல்லை. புதிய கிரே ஃபினிஷ் பெற்ற அலாய் வீல் கொண்டுள்ளது. காரின் பின்புறத்தில் டெயில் விளக்குகள் மற்றும் ரிஃபெளெக்டர் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. மற்றபடி க்விட் கிளைம்பர் வேரியண்டில் இடம்பெறுகின்ற ஆரஞ்சு நிற பாடி கிளாடிங், ஓஆர்விஎம் மற்றும் ஸ்கிட் பிளேட்டுகளை கொண்டுள்ளது.

க்விட் காரின் இன்டிரியர் அமைப்பில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ட்ரைபரில் இடம்பெற்றுள்ள 8.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மிக நேர்த்தியான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், க்ளோவ் பாக்ஸ் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஏசி வென்ட், கன்சோல் பட்டன்கள், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் ரோட்டரி லிவர் இரு இருக்கைகளுக்கு மத்தியில் மாற்றப்பட்டுள்ள. மேனுவல் கியர்பாக்சில் வழக்கம் போல அமைந்துள்ளது. க்விட் கிளைம்பர் வேரியண்டில் ஆரஞ்சு மற்றும் பிளாக் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

image source – fb/Bathindian Amy and youtube/telugu trolls

Exit mobile version