ரெனோ க்விட் காரில் ஏ.பி.எஸ் உட்பட கூடுதல் வசதிகள் அறிமுகம்

ரெனோ இந்தியா நிறுவனத்தின், பிரசத்தி பெற்ற ரெனோ க்விட் கார் மாடலில் ஏ.பி.எஸ் , ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டராய்டு ஆட்டோ வசதிகளை பெற்ற 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை. புதிய க்விட் காரில் 54 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 0.8 லிட்டர் என்ஜின் மற்றும் 68 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் என்ஜின் பெற்றிருக்கின்றது. இந்த இரு என்ஜின் மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 1.0 லிட்டர் மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

க்விட் காரின் அனைத்து வேரியன்டிலும், ஏபிஎஸ் மற்றும் இபிடி ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த இருக்கை பட்டை நினைவுப்படுத்துதல் உட்பட டாப் வேரியன்டில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியை பெற்றிருக்கின்றது. யூஎஸ்பி சார்ஜர் உடன் கூடிய ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பம் பெற்றதாக வந்துள்ளது.

ஏப்ரல் 1,2019 முதல் ஏபிஎஸ் மற்றும் இபிடி உட்பட இருக்கை பட்டை , ரியர் பார்க்கிங் சென்சார் உட்பட பல்வேறு வசதிகளை அடிப்படை அம்சமாக இணைக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.

க்விட் மாடலில் உள்ள அனைத்து வேரியன்டின் விலைகளும் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உயர்த்தப்பட உள்ளது. க்விட் கார் 0.8 லிட்டர் மாடலின் ஆரம்ப வேரியன்ட் விலை ரூ.2.66 லட்சம் டாப் க்விட் கிளைம்பர் கார் வேரியன்ட் விலை ரூ. 4.63 லட்சம் என தொடங்கலாம்.

Exit mobile version