Automobile Tamil

ரூ.4 லட்சத்தில் வரவுள்ள டாடா HBX எஸ்யூவி அறிமுகம் எப்போது ?

tata hbx concept

முதலில் H2X பிறகு HBX என காட்சிப்படுத்தப்பட்ட சிறிய எஸ்யூவி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது. தற்போது சோதனை செய்யப்படுகின்ற முழுமையான உற்பத்தி நிலை மாடல் கான்செப்ட் நிலைக்கு இணையாக அமைந்துள்ளது.

டாடா HBX எஸ்யூவி

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள சிறிய ரக எஸ்யூவி உட்பட பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக உள்ள டாடா HBX கான்செப்ட்டின் உற்பத்தி நிலை மாடலில் மிக நேரடியாக கான்செப்ட்டினை தழுவியதாக சோதனை ஓட்ட கார்கள் அமைந்திருக்கின்றது.

ALFA (Agile, Light, Flexible, Advanced) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள இந்த காரில் மிக நேர்த்தியான முன்புற அமைப்பு கொடுக்கப்பட்டு, இரு பிரிவுகளை பெற்ற ஹாலஜென் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்றிருக்கின்றது. உயரமான வீல் ஆர்சு, டாப் வேரியண்டுகளில் இரு வண்ண கலவையிலான அலாய் வீல் கொண்டிருக்கும்.

டாடா ஹார்ன்பில் பெயர் ?

விற்பனைக்கு வரவுள்ள மாடலின் பெயர் அனேகமாக டாடா ஹார்ன்பில் என்று அழைக்கப்படலாம் என கருதப்படுகின்றது. இந்த காரில் 86 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். டீசல் என்ஜின் வருகை குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.

போட்டியாளர்கள் யார் ?

ரெனோ க்விட், மாருதி எஸ்-பிரெஸ்ஸோ, மஹிந்திரா கேயூவி 100 நெக்ஸ்ட் மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் AX1 ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் டாடா HBX விலை ரூ.4 லட்சம் முதல் துவங்கலாம். விற்பனைக்கு 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்க்கலாம்.

Exit mobile version