ரூ. 4.99 லட்சத்தில் நிசான் மேக்னைட் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

இந்திய சந்தையில் புதிதாக மேக்னைட் எஸ்யூவி (Nissan Magnite) காரை ரூ.4.99 லட்சம் முதல் ரூ.9.35 லட்சம் விலையில் விற்பனைக்கு நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரூ.11,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகின்ற நிலையில் விநியோகம் துவங்கப்பட உள்ளது. டிசம்பர் 31 வரை முன்பதிவு செய்பவர்களுக்கு குறைந்த விலை சலுகை கிடைக்கும்.

4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் வந்துள்ள இந்த காருக்க சவாலினை ஏற்படுத்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் போன்றவற்றுடன் வரவிருக்கும் ரெனால்ட் கிகர் எஸ்யூவி ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

நிசான் மேக்னைட் இன்ஜின்

டீசல் இன்ஜின் இல்லாமல் பெட்ரோல் இன்ஜின் மட்டும் பெற்றதாக விற்பனைக்கு வந்துள்ள மேக்னைட் காரில் 1.0L B4D பெட்ரோல் மற்றும் டாப் வேரியண்டில் 1.0L HRA0 டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷனை சேர்க்கப்பட்டுள்ளது.

குறைந்த விலை வேரியண்டில் இடம்பெற்றுள்ள 1.0 லிட்டர் B4D பெட்ரோல் இன்ஜின் 72hp பவர் 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடியதாக உள்ள இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18.75 கிமீ மைலேஜ் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.

அதிகபட்சமாக 100 hp பவர் 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT வேரியண்ட்) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 20 கிலோமீட்டர் எனவும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 17.7 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேக்னைட் வேரியண்ட் வசதிகள்

XE (பேஸ்) : மேக்னைட்டின் ஆரம்ப நிலை வேரியண்டில் 16 அங்குல வீல், ஸ்கிட் பிளேட், மேற்கூரை ரெயில்கள், 3.5 அங்குல சாதாரண எல்.சி.டி கிளஸ்ட்டர், ஆல் பவர் விண்டோஸ் மற்றும் இரட்டை நிறத்தை பெற்ற உட்புறத்தை கொண்டிருக்கின்றது.

XL (மிட்) :  6 ஸ்பீக்கர்களுடன் ஒருங்கிணைந்த ஆடியோ சிஸ்டம், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல், ஆட்டோ ஏசி மற்றும் எலக்ட்ரிக் அட்ஜெஸ்டபிள் மற்றும் மடிக்கக்கூடிய வெளிப்புற கண்ணாடிகள் பெற்றதாக வருகிறது.

XV (High) : 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் (டிஆர்எல்) மற்றும் பனி விளக்குகள், 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 7 அங்குல டிஎஃப்டி  கிளஸ்ட்டர், வாய்ஸ் கன்ட்ரோல் , ரியர் வியூ கேமரா மற்றும் புஷ் ஸ்டார்ட் பட்டன் உள்ளது.

XV (Premium) ; எல்இடி பை-ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், குரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி அவுண்ட் வியூ மானிட்டர் கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் மற்றும்  ஸ்போர்ட்டிவ் இன்டீரியர் பெற்றிருக்கும்.

நிசான் மேக்னைட் விலை பட்டியல்

வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்பாக முன்பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு வேரியண்ட் வாரியாக ரூ.50,000 வரை விலை குறைவாக வாங்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு வேரியண்டின் விலையும் ரூ.50,000 உயர்த்தப்பட உள்ளது.

வேரியண்ட் விலை
XE ரூ. 4.99 லட்சம்
XL ரூ. 5.99 லட்சம்
XV ரூ. 6.68 லட்சம்
XV Premium ரூ. 7.55 லட்சம்
Turbo XL ரூ. 6.99 லட்சம்
Turbo XV ரூ.  7.68 லட்சம்
Turbo XV Premium ரூ. 8.45 லட்சம்
Turbo XL CVT ரூ. 7.89 லட்சம்
Turbo XV CVT ரூ. 8.58 லட்சம்
Turbo XV Premium CVT ரூ. 9.35 லட்சம்

 

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

 

 

Exit mobile version