Automobile Tamilan

புதிய மேக்னைட் எஸ்யூவி ஸ்பை படம் சிக்கியது

நிசான் நிறுவனத்தின் முதல் 4 மீட்டருக்கு குறைவான நீளத்தை பெற்ற மேக்னைட் எஸ்யூவியின் கான்செப்ட் நிலை மாடலுக்கு இணையான உற்பத்தி நிலை மாடல் முதன்முறையாக காரின் ஸ்பை படம் இணையத்தில் கசிந்துள்ளது.

கடந்த ஜூலை 16 ஆம் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட நிசான் மேக்னைட் கான்செப்ட் எஸ்யூவி காரினை தோற்ற உந்துதலை கொண்டு உற்பத்திக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. எனவே காரின் மீதான கவனம் மேலும் அதிகரித்துள்ளது.

புதிதாக கொடுக்கப்பட்டுள்ள மிகவும் கூர்மையான தோற்றத்தை வெளிப்படுத்தும் ஹெட்லைட் கிக்ஸ் காரில் உள்ளதை போன்றே அமைந்திருப்பதுடன், எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்று எண்கோண கிரில் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. தற்போது வந்துள்ள ஸ்பை படத்தின் மூலம் இந்த மாடல் பேஸ் அல்லது நடுத்தர வேரியண்டாக இருக்கலாம். அதற்கு காரணம் எல்இடி ஹெட்லைட் , எல்இடி டிஆர்எல் கொடுக்கப்படவில்லை. டாப் வேரியண்டில் மட்டும் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்றிருக்கும்.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நிசான் லோகோ கொடுக்கப்பட்டிருப்பதுடன் மிக நேர்த்தியான எண்கோன வடிவ கிரில் காரின் கம்பீரத்தை மேலும் அதிகரிக்கின்றது.

மேக்னைட் எஸ்யூவி கார் மாடலில் 95 hp பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது. இதுதவிர சாதாரன 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 72hp பவருடன் வரக்கூடும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெறக் கூடும்.

நடப்பு நிதி ஆண்டில்  அதாவது ஜனவரி 2021-ல் மேக்னைட் எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வருவதனை நிசான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

image source

Exit mobile version