Automobile Tamil

புதிய நிசான் மேக்னைட் எஸ்யூவி அறிமுகமானது

நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மேக்னைட் எஸ்யூவி கார் மிக நேர்த்தியான வடிவ தாத்பரியத்துடன் அமைந்துள்ளது. பல்வேறு புதிய அம்சங்களை பெறுகின்ற முதல் காராக விளங்குகின்றது.

ரெனால்ட்-நிசான் கூட்டு நிறுவனத்தின் CMF-A பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு 4 மீட்டருக்கு குறைவான நீளத்தை கொண்டிருக்கின்ற மாடலாக மேக்னைட் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக இதே பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட காராக ரெனோ ட்ரைபர் எம்பிவி விற்பனையில் உள்ளது. இந்த எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்ட ரெனோ கைகெர் எஸ்யூவி அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது.

மேக்னைட் எஸ்யூவி இன்ஜின் விபரம்

இன்ஜின் குறித்த தகவல் வெளியாகவில்லை. மேக்னைட் எஸ்யூவி கார் மாடலில் 95 hp பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது. இதுதவிர சாதாரன 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 72hp பவருடன் வரக்கூடும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெறக் கூடும்.

நிஸான் மேக்னைட் டிசைன்

நிஸான் நிறுவனத்தின் புத்தம் புதிய லோகோ பெற்றதாக வந்துள்ள மேக்னேட்டின் முன்புற கிரில் டட்சன் பிராண்டுகளில் உள்ளதை போன்ற எண்கோண கிரில் வடிவமைப்பைக் கொண்டதாக அமைந்துள்ளது.

எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல், எல்இடி பனி விளக்கு, 16 அங்குல அலாய் வீல், நேர்த்தியான வீல் ஆர்சு கொண்டு அதே நேரத்தில் A மற்றும் C பில்லர்களில் சற்று சாய்வாக வழங்கப்பட்டு கிராஸ்ஓவர் மாடல்களை போன்ற தோற்ற பொலிவினை வழங்குகின்றது. பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு, நேர்த்தியான பம்பர் கொண்டுள்ளது.

இன்டிரயரில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் முதன்முறையாக மேக்னைட் காரில் 360 டிகிரி கோண கேமரா, ஏபிஎஸ், வெய்கிள் டைனமிக் கன்ட்ரோல், இபிடி, ஹீல் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்‌ஷன் கன்ட்ரோல் ஆகியவற்றை பெற்றுள்ளது.

போட்டியாளர்கள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, டாடா நெக்ஸான், டொயோட்டா விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது.

விற்பனைக்கு வெளியிடப்படுகின்ற தேதி குறித்து எந்த தகவலும் இல்லை. தற்போது நிசான் இணையதளத்தில் விரிச்சுவல் முறையில் மேக்னைட் எஸ்யூவி காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

web title : Nissan Magnite suv debuts in India

Exit mobile version