புதிய நிசான் மைக்ரா விற்பனைக்கு வந்தது..!

ரூ. 5.98 லட்சம் ஆரம்ப விலையில் புதிய வசதிகளுடன் கூடிய புதிய நிசான் மைக்ரா கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. தானியங்கி ஹெட்லேம்ப்,  மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர் போன்ற சில புதிய வசதிகளை பெற்றுள்ளது.

 

 

புதிய நிசான் மைக்ரா

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற ஐந்தாவது தலைமுறை மைக்ரா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. சில கூடுதலான வசதிகளை மட்டுமே சேர்க்கப்பட்ட மைக்ரா கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.  இந்தியாவின் குறைந்த விலை கொண்ட சிவிடி கியர்பாக்ஸ் பெற்ற மாடல் என்ற பெருமையை மைக்ரா தொடருகின்றது.

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 73 bhp பவருடன் 104 Nm டார்க் வழங்கி வருகின்றது, இதுதவிர டீசல் பிரிவில் கிடைக்கின்ற 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 63 bhp பவருடன் 160 Nm டார்க் வழங்குகின்றது. இரு எஞ்சின்களிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் பெட்ரோல் மாடலில் கூடுதலாக  சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

புதிய மைக்ரா காரில் தானியங்கி ஹெட்லேம்ப் உடன் ஃபாலோ மீ வசதி,  மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர் மற்றும் கேபினில் ஆரஞ்சு அசென்ட் போன்வற்றை கூடுதலாக மற்றபடி வேறு எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை.

ModelsPrices
XL (CVT)ரூ.,98,431
XV (CVT)ரூ.6,94,299
dCi XLரூ.6,61,344
dCi XL Comfortரூ.7,22,260

(அனைத்தும் சென்னை எக்ஸ-ஷோரூம் விலை)

Recommended For You