Automobile Tamilan

முதன்முறையாக நிசான் காம்பேக்ட் எஸ்யூவி டீசர் வெளியீடு

Nissan sub-4 meter SUV in India

இந்தியாவிற்கான பிரத்தியேக 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை நிசான் முதன்முறையாக வெளியிட்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடல் EM2 என்ற குறியீட்டு பெயரில் தயாரிக்கப்படுகின்ற கார் செப்டம்பர் 2020-ல் விற்பனைக்கு வெளிவரக்கூடும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பிரசத்தி பெற்ற ஹூண்டாய் வென்யூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாமஹிந்திரா எக்ஸ்யூவி300ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டாடா நெக்ஸான் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன் அடுத்த ஆறு மாதங்களுக்குள் வெளியிடப்பட உள்ள கியா qyi, ரெனோ ஹெச்பிசி காரையும் எதிர்கொள்ள உள்ளது.

இந்த எஸ்யூவி மாடல் ரெனோ-நிசான் கூட்டணியின் CMF-A பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட உள்ளது. சமீபத்தில் வெளியான ட்ரைபர் காரை வடிவமைக்கப்பட்ட பிளாட்ஃபாரம் ஆகும். ரெனால்ட் நிறுவனத்தின் HBC காம்பேக்ட் எஸ்யூவி மாடலும் நிசான் நிறுவன புதிய எஸ்யூவி மாடலும் பெரும்பாலான பாகங்களை பகிர்ந்து கொள்ள உள்ளது.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும் நிசான் காம்பேக்ட் எஸ்யூவி விலை ரூ.7.00 லட்சத்திற்குள் தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

நிசான் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “இந்திய சந்தையில் எங்கள் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறோம், மேலும் நிசான் கீழ் வரவிருக்கும் பல புதிய பிரீமியம் தயாரிப்புகளுடன் நிசான் இந்திய சந்தையில் முன்னணி பிராண்டாக மாற்ற எதிர்பார்க்கிறோம். என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version