கியா கார்னிவல்

கோவிட்-19 பரவலால் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நிதிப் பற்றாக்குறையினால் தத்தளிக்க துவங்கியுள்ள நிலையில் முன்பாக கார்களை முன்பதிவு செய்திருந்தவர்கள் தங்களது முன்பதிவு ரத்து செய்ய ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக எம்ஜி மோட்டார், கியா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களுக்கு அமோகமான முன்பதிவு நடுத்தர எஸ்யூவி சந்தையில் கிடைத்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு இப்போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்த அளவிலான பணியாளர்களை கொண்டு ஆட்டோமொபைல் ஆலைகள் மற்றும் டீலர்கள் பரவலாக துவங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிஎஸ்6 வாகனங்களின் அதீத விலை உயர்வு மற்றும் நிதிப் பற்றாக்குறை போன்றவற்றால் பெரும்பாலான டீலர்களுக்கு வந்த அழைப்புகளில் முன்பதிவை ரத்து செய்வதற்கான முயற்சியை வாடிக்கையாளர்கள் மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில் இருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்களின் சலுகைகளை பற்றி பலரும் கேட்க துவங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

அடுத்த சில வாரங்களில் நாடு முழுவதும் பெருவாரியான டீலர்கள் துவங்கிய பிறகே முன்பதிவுகளை ரத்து செய்வது தொடர்பாக ஒரு முழுமையான தெளிவு கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

source