Automobile Tamil

வால்வோ போல்ஸ்டார் நிறுவனத்தின் போல்ஸ்டார் 1 கார் அறிமுகம்

ஸ்விடன் நாட்டின் வால்வோ நிறுவனத்தின் கீழ் புதிதாக எலெக்ட்ரிக் கார்களுக்கு என பிரத்தியேகமான போல்ஸ்டார் பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் முதல் போல்ஸ்டார் 1 ஹைபிரிட் காரை அறிமுகம் செய்துள்ளது.

போல்ஸ்டார்

 

வால்வோ நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்த போல்ஸ்டார் தற்போது தனியான பிராண்டாக அறிமுகம் செய்யப்பட்டு முதல் பெர்ஃபாமென்ஸ் ரக ஹைபிரிட் எலக்ட்ரிக் மாடலாக போல்ஸ்டார் 1 வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 600 ஹெச்பி குதிரை திறன் வெளிப்படுத்தும் 4 இருக்கை கொண்ட கூபே ரக போல்ஸ்டார் 1 மாடலில் இடம்பெற உள்ள எலக்ட்ரிக் பவர்ட்ரெயின் இரண்டு மின்சார மோட்டார்களுடன் 218hp குதிரை திறனுடன் அதிகபட்சமாக 150 கிமீ தொலைவு வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக இடம்பெற்றுள்ள 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்மாக 382 ஹெச்பி குதிரை திறன் வெளிப்படுத்துவதுடன், இரு விசைப்பொறிகளும் இணைந்து அதிகபட்சமாக 600 ஹெச்பி குதிரை திறன் மற்றும் 1000 என்எம் டார்க் வழங்கவல்லதாக இருக்கும்.

வால்வோ நிறுவனத்தின் எஸ்பிஏ ( Scalable Platform Architecture) பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள போல்ஸ்டார்1 கான்செப்ட் மாடல் 2013 ஆம் ஆண்டில் வால்வோ வெளியிட்டிருந்த கான்செப்ட் கூபே ரக மாடலின் பின்னணியாக கொண்டு வால்வோ S90 காரின் உந்துதலை கொண்டதாக 4.5 மீட்டர் நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தோர் சுத்தியில் போன்ற வடிவமைப்பை பெற்ற எல்இடி முகப்பு விளக்கினை கொண்டதாக, எல்இடி டெயில் விளக்குகள் பெற்றுள்ள இந்த மாடலில் உட்புறத்தில் மிக நேர்த்தியான 4 இருக்கைகளுடன் தாராளமான இடவசதி கொண்டதாக வந்துள்ளது.

முதன்முறையாக ஒஹிலின்ஸ் எலக்ட்ரிக் கார் சஸ்பென்ஷனை நிரந்தர அம்சமாக கொண்டிருக்கின்ற மாடலாக வரவுள்ள போல்ஸ்டார் 1 காரில் 6 பிஸ்டன் பிரேக் காலிப்பர் பெற்ற 400 மிமீ டிஸ்க் பெற்றுள்ளது.

போல்ஸ்டார் உற்பத்தி

சீனாவின் ஜீலி நிறுவனத்தின் தலைமையாக கொண்டு செயல்படும் வால்வோ நிறுவனம் போல்ஸ்டார் பிராண்டு கார்களை சீனாவில் உள்ள செங்கடூ நகரில் உற்பத்தி செய்ய உள்ளது.

முதற்கட்டமாக 2019 வருடம் முதல் ஆண்டுக்கு 500 கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ள நிலையில் ஆன்லைனில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் கிடைக்கும்.

அடுத்தடுத்து போல்ஸ்டார் 2 செடான் மற்றும் போல்ஸ்டார் 3 எஸ்யூவி ஆகிய இரண்டு மாடல்களை வெளியிட உள்ளது.

Exit mobile version