450 கிமீ பயணிக்கும் திறனை பெற்ற போர்ஷே டேகேன் EV எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் இந்திய வருகை விபரம்

0

Porsche Taycan ev

இந்தியாவில் வோக்ஸ்வேகன் குழுமம் வெளியிட உள்ள முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காராக போர்ஷே டேகேன் விளங்க உள்ளது. இந்த மாடல் 2020 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு கிடைக்கலாம்.

Google News

போர்ஷே மிஷன் இ என 2015 ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டு பின்பு 2019 பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் டேகேன் என்ற பெயரை பெற்று விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் டர்போ மற்றும் டர்போ எஸ் என இருவிதமான வேரியண்டில் கிடைக்க உள்ளது.

டேகேன் காரில் இரு மின்சார மோட்டார்கள்  (முன்புறம் மற்றும் பின்புற ஆக்சில்) 616 ஹெச்பி குதிரைத்திறன் வங்குவதுடன் , ஆனால் இதை ‘ஓவர் பூஸ்ட் பவர்’ அம்சத்தால் டர்போவில் 500 கிலோவாட் (சுமார் 680 குதிரைத்திறன்) வழங்குவதுடன் 3 வினாடிகளில் 0-100 கி.மீ வேகத்தில் செல்ல முடியும் மற்றும் டர்போ எஸ் வேரியண்டில் அதிகபட்சமாக 560 கிலோவாட் (சுமார் 760 குதிரைத்திறன்) 2.8 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

93.4 கிலோ வாட் ஹவர் லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு டர்போ வேரியண்டை பொறுத்தவரை 381 கிமீ – 450 கிமீ ரேஞ்சு வழங்குவதுடன், டாப் டர்போ எஸ் வேரியண்ட் 370 கிமீ வரை வழங்கும் என WLTP சோதனை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

800 வோல்ட் க்விக் சார்ஜிங் மூலம் 0-80 சதவீதம் பெற வெறும் 22 நிமிடங்கள் மட்டும் போதுமானதாகும். சாதாரன 9.6 கிலோ வாட் ஹவர் ஏசி சார்ஜர் மூலமாக 11 மணி தேவைக்கபடும் 0-100 % சார்ஜினை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு முழுமையாக வடிவமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.