Automobile Tamil

கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் புதிய ரெனோ கேப்டூர் அறிமுகம்

புதிய ரெனோ கேப்டூர் கார்

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ள புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி மாடலின் தொடக்க விலை ரூபாய் 9.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் RXL மற்றும் RXT வேரியன்டுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

வரும் அக்டோபர் 2019 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளை பின்பற்றும் நோக்கில் கேப்டூர் எஸ்யூவியின் பாதுகாப்பு சார்ந்த வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ரெனோ கேப்டூரில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிப்பு

இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப கார்களை புதுப்பிக்க தொடங்கியுள்ள மோட்டார் நிறுவனங்கள் வரிசையில் தற்போது ரெனோ கேப்டூர் இணைந்துள்ளது. கூடுதல் வசதிகளை பெற்றிருந்தாலும் முந்தைய மாடலை விட ரூ,50,000 வரை விலை குறைந்த பேஸ் மாடல் கிடைக்க தொடங்கியுள்ளது.

புதிய கேப்டூரில்  RXE மற்றும் டாப் Platine வேரியன்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினை கொண்டுள்ளது. புதிதாக ஓட்டுநர் மற்றும் உடன் அமருபவருக்கான சிட் பெல்ட் ரிமைன்டர், ரியர் பார்க்கிங் சென்சார், வேகத்தை உணர்ந்து எச்சரிக்கும் ஸ்பீடு அலர்ட் போன்றவற்றுடன் முன்பே வழங்ப்பபடு வரும் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஐஎஸ்ஓ சைல்டு இருக்கைகள் போன்றவற்றை பெற்றுள்ளது.

மேலும் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அப்ஹோல்ஸ்ட்ரி கொண்டுள்ளது.

இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 106 hp பவர் மற்றும் 142 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 5 வேக மேனுவல்  கியர்பாக்ஸ் கொண்டிருக்கின்றது. இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 13.87 கிமீ ஆகும். அடுத்த உள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 110 hp பவர் மற்றும் 245 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. கேப்டூர் டீசல் கார் மைலேஜ் 20.37 கிமீ ஆகும்.

Exit mobile version