தீபாவளி பரிசாக ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி அறிமுகம் மற்றும் முன்பதிவு விபரம்

0

india spec renault captur soonஇந்தியாவில் டஸ்ட்டர் மற்றும் க்விட் ஆகிய மாடல்கள் வாயிலாக சிறப்பான பங்களிப்பை பெற்றுள்ள ரெனால்ட், புதிதாக ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி-யை செப்டம்பர் 21ந் தேதி அறிமுகம் செய்கின்றது.

ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி அறிமுகம்

Renault Captur teaser India official

Google News

 

ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ், மஹிந்திரா எக்ஸ்.யூ.வி 500 ஆகிய மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் ரெனால்ட் கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் செப்டம்பர் 21ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதை தொடர்ந்து, மறுநாள் அதாவது செப்டம்பர் 22ந் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட உள்ளதால் அக்டோபர் மாத மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

டஸ்ட்டர் எஸ்யூவி மாடலில் இடம்பெற்றுள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 106 hp பவர் மற்றும் 142 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 5 வேக மேனுவல் தவிர சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம். மேலும்  1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 110 hp பவர் மற்றும் 245 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 6 வேக மேனுவல் தவிர 6 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர ஆல்வீல் டிரைவ் வேரியன்ட் ஆப்ஷனலாக அறிமுகம் செய்யப்படலாம்.

பல்வேறு நவீன வசதிகளான எல்இடி ஹெட்லேம்ப் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகள், 17 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் ஆகியவற்றுடன் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை கொண்டதாக இருக்கும்.

2,673 மிமீ வீல்பேஸ் பெற்ற மாடலாக இருக்கும் என்பதனால் தாராளமான  இடவசதி பெற்ற மாடலாகவும் 387 லிட்டர் கொள்ளளவு பெற்ற பூட் வசதியை, மேலும்அதிகரிக்க பின்புற இருக்கைகளை மடக்கினால் 1,200 லிட்டர் வரை விரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய சந்தையில் பெரும்பாலான உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படும் என்பதனால், இந்த க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி காப்டூர் மாடல் மிகவும் சவாலாகவும் பல்வேறு வசதிகளை பெற்றதாகவும் விற்பனைக்கு வரக்கூடும்.

renault captur interior

ரெனோ கேப்டூர் விலை

கேப்டூர் எஸ்யூவி விலை ரூ.12 லட்சத்தில் தொடங்கி ரூ.17 லட்சத்திற்குள் அமையும் வாய்ப்புகள் உள்ளது. வருகின்ற செப்டம்பர் 21ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதை தொடர்ந்து, மறுநாள் அதாவது செப்டம்பர் 22ந் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட உள்ளதால் அக்டோபர் மாத மத்தியில் அதாவது தீபாவளிக்கு முன்னதாக டெலிவரி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

renault captur side view

மேலதிக ஆட்டோமொபைல் செய்திகள் வாசிக்க தொடர்ந்து இணைந்திருங்கள்