ரூ.7.99 லட்சம் ஆரம்ப விலையில் ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு வெளியாகலாம்

0

renault duster

பிரபலமான ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின், ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Google News

தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற டஸ்ட்டர் எஸ்யூவி மாடலின் ஆரம்ப விலையில் எந்த மாற்றங்களும் இல்லாமல் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு வெளியாக உள்ளது. மேலும் டாப் என்ட் வேரியண்ட் மட்டும் கூடுதலான விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

ரெனோ டஸ்ட்டர் விலை மற்றும் விவரம்

ஆட்டோகார் இந்தியா வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி டஸ்ட்டர் காரில் எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய புராஜெக்டர் ஹெட்லைட், மிக நேர்த்தியான மாற்றியமைக்கப்பட்ட முன்புற கிரில், முன் மற்றும் பின்புற பம்பர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்தப்படியாக, புதிய வடிவத்தைப் பெற்ற டிசைன் அலாய் வீல், சன் ரூஃப் அம்சங்களை கொண்டிருப்பதுடன் வரவுள்ளது. இன்டிரியரில் குறிப்பாக மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உட்பட பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றிருக்கும்.

Renault Duster suv

1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் முதற்கட்டமாக விற்பனைக்கு வெளியாக உள்ளது. பிஎஸ் 6 நடைமுறைக்கு வரும்போது 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கைவிடப்பட உள்ளதாக ரெனோ இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

வரும் ஜூலை 8 ஆம் தேதி ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு வரவுள்ளது. டஸ்ட்டரை தொடர்ந்து ரெனோ ட்ரைபர் எம்பிவி விற்பனைக்கு வெளியாக உள்ளது.

Renault Duster spied Renault Duster