ரெனால்ட் கைகர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

0

renault kiger suv unveil

4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் நுழைந்துள்ள ரெனால்ட் கைகர் காரின் விலை ரூ.5.45 லட்சம் முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ.9.55 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

Google News

இந்திய சந்தையில் மிக கடுமையான போட்டி நிலவுகின்ற காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் கைகர் போட்டியாளர்களுக்கு மிகவும் சவால் விடுக்கும் வகையில் விலை அமைந்துள்ளது. ரெனோ-நிசான் கூட்டு நிறுவனத்தின் CMFA+ பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட மேக்னைட் எஸ்யூவி காரை தொடர்ந்து கிகர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கைகர் இன்ஜின் வசதி

மேக்னைட்டில் இடம்பெற்றிருக்கின்ற பெட்ரோல் இன்ஜின்களை பகிர்ந்து கொள்ளுகின்றது. மற்றபடி, இந்த காரிலும் டீசல் இன்ஜின் இடம் பெறவில்லை.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த இன்ஜினில் நார்மல், ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவ் மோடு இடம்பெற்றிருக்கும்.

மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ எனவும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 17.7 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Renault Kiger interior

குறைந்த விலை வேரியண்டுகளில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18.75 கிமீ மைலேஜ் வழங்குகின்றது.

2021 Renault Kiger Price list

Renault Kiger RXE RXL RXT RXZ
Energy MT ₹ 5.45 லட்சம் ₹ 6.14 லட்சம் ₹ 6.60 லட்சம் ₹ 7.55 லட்சம்
Easy-R AMT ₹ 6.59 லட்சம் ₹ 7.05 லட்சம் ₹ 8.00 லட்சம்
Turbo MT ₹ 7.14 லட்சம் ₹ 7.60 லட்சம் ₹ 8.55 லட்சம்
X-Tronic CVT ₹ 8.60 லட்சம் ₹ 9.55 லட்சம்

 

கைகருக்கு போட்டியாக விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான்மஹிந்திரா எக்ஸ்யூவி 300, கியா சொனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் மேக்னைட் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.