செம்ம ஸ்டைலிஷான ரெனால்ட் கிகர் எஸ்யூவி அறிமுகமானது

இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள கிகர் எஸ்யூவி மாடலின் உற்பத்தி நிலை காரை சர்வதேச அளவில் அறிமுகம் செய்துள்ளது. விற்பனைக்கு மார்ச் மாதம் வெளியிடப்பட உள்ளது.

இந்தியர்களுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. முன்பாக ரெனோ-நிசான் கூட்டு நிறுவனத்தின் CMFA+ பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட மேக்னைட் எஸ்யூவி காரை தொடர்ந்து கிகர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிகர் 4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற எஸ்யூவி மாடலின் முன்புற அமைப்பில் மிக நேர்த்தியான இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ரின்னிங் விளக்குகள் மற்றும் மூன்று பிரிவுகளாக எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் அமைந்துள்ளது. மிதக்கும் வகையிலான மேற்கூறையை வெளிப்படுத்துகின்ற வகையில் சி பில்லரில் கருமை நிறம், ரூஃப் ரெயில் 16 அங்குல டூயல் டோன் அலாய் வீல், மிக நேர்த்தியான எல்இடி டெயில் லைட் கொடுக்கப்பட்டுள்ளது.

கிகருக்கு ரெனால்ட் ஆறு வண்ண விருப்பங்களை வழங்குகின்றது. அவை ஐஸ் கூல் ஒயிட், பிளானட் கிரே, மூன்லைட் கிரே, மஹோகனி பிரவுன், காஸ்பியன் ப்ளூ மற்றும் ரேடியண்ட் ரெட் வித் மிஸ்டரி பிளாக் ரூஃப் ஆகும். கிகரின் அனைத்து டிரிம்களிலும் டூயல் டோன் வண்ண விருப்பங்கள் கிடைக்கும். இருப்பினும் ரேடியண்ட் ரெட் டாப் வேரியண்டிற்கு மட்டும் பிரத்யேகமானது.

இன்டிரியரில் 8.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, Arkamys ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றுடன், 7.0 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டரை கொண்டுள்ள நிலையில் 405 லிட்டர் கொள்ளளவு பெற்ற பூட் வசதி வழங்கப்பட உள்ளது.

கிகர் இன்ஜின் விபரம்

கிகர் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த இன்ஜினில் நார்மல், ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவ் மோடு இடம்பெற்றிருக்கும்.

மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ எனவும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 17.7 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, பேஸ் வேரியண்டுகளில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18.75 கிமீ மைலேஜ் வழங்குகின்றது.

கிகர் போட்டியாளர்கள்

இந்த காருக்கு போட்டியாக விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான்மஹிந்திரா எக்ஸ்யூவி 300, கியா சொனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் மேக்னைட் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

Exit mobile version