Automobile Tamilan

ரெனால்ட் க்விட் அடிப்படையில் டாசியா ஸ்பிரிங் எலக்ட்ரிக் அறிமுகம்

ரெனால்ட் நிறுவனத்தின் டாசியா பிராண்டில் ஸ்பிரிங் எலக்ட்ரிக் கார் ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் விற்பனையில் உள்ள க்விட் காரின் அடிப்படையில்தான் இந்த மின்சார கார் வெளியிடபட்டுள்ளது.

முன்பாக சீன சந்தையில் ரெனோ K-ZE என்ற பெயரில் மின்சார காராக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்திய சந்தையில் முதன்முறையாக ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் கே-இசட்இ காட்சிக்கு வைக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோவிட்-19 பரவலால் விற்பனைக்கு கொண்டு வருவதனை ரெனால்ட் இந்தியா தாமதமாக அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

டாசியா ஸ்பிரிங் எலக்ட்ரிக்

இந்த மின்சார காரில் 26.8 கிலோவாட் பேட்டரி மற்றும் 33 கிலோ வாட் மின்சார மோட்டாரை பெற்றுள்ளது. சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 225 கிமீ (WLTP) ரேஞ்சை வழங்குகிறது. மிக வேகமான சார்ஜிங் முறையில் K-ZE காருக்கு 50 நிமிடங்களில் 0-80% வரை சார்ஜ் செய்ய இலும். அதே நேரத்தில் சாதாரண ஏசி சார்ஜரில் 100% பேட்டரி சார்ஜ் அடைய 4 மணிநேரம் ஆகும்.

44 ஹெச்பி பவர், 125 என்எம் டார்க் மின்சார மோட்டார் முன் சக்கரங்களை இயக்குகிறது. மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனை கொண்டுள்ளது.

டாசியா ஸ்பிரிங் எலக்ட்ரிக் காரின் இன்டிரியரில் 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு  ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆதரவு, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இரட்டை-முன் ஏர்பேக்குகள், ஒரு டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு மற்றும் பின்புற பார்க்கிங் கேமராவுடன் வரவுள்ளது.

இந்தியாவில் ரெனோ க்விட் எலக்ட்ரிக் காரின் அறிமுகம் எப்போது ?

அடுத்த இரண்டு ஆண்டுகளில் விற்பனைக்கு வரலாம் என ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று தாமதமாக 2022 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாக வாய்ப்புகள் உள்ளது.

web title : Renault Kwid based Dacia Spring ev debuts

Exit mobile version