ரெனால்ட் க்விட் சூப்பர்ஹீரோ எடிசன் விற்பனைக்கு வெளியானது

பிரசத்தி பெற்ற ரெனால்ட் க்விட் காரின் அடிப்பையில் சூப்பர் ஹீரோ எடிசன் காரை ரெனால்ட் இந்தியா நிறுவனம், மார்வெல் ஸ்டூடியோவுடன் இணைந்து  ரூ.4.34 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ரெனால்ட் க்விட் சூப்பர்ஹீரோ எடிசன்

ரெனோ க்விட் காரில் கேப்டன் அமெரிக்கா மற்றும் ஐயன்மேன் ஆகிய இரண்டு பிரசத்தி பெற்ற ஹாலிவுட் திரைப்பட கதாபாத்திரங்களை பின்னணியாக கொண்டு புதிய ஸ்டைலிங் அம்சங்களை பெற்ற க்விட் கார் 1.0 லிட்டர் எஞ்சின் மாடலில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.

சூப்பர் ஹீரோ எடிசன்கள் தோற்ற அமைப்பில் பல்வேறு டிசைன் சார்ந்த அம்சங்களை பெற்றுள்ள நிலையில், இன்டிரியரில் அமைப்பில் ஐயன்மேன் எடிசனில் சிவப்பு நிற கன்சோல், கேப்டன் அமெரிக்கா எடிசனில் நீல நிற கன்சோல் பெற்றுள்ளது.

RXT ஆப்ஷனல் வேரியன்டை விட ரூ.29,000 விலை கூடுதலாக அமைந்துள்ள சூப்பர் ஹீரோ எடிசன் மாடல் பிரத்தியேகமாக அமேசான் இந்தியா இணையதளத்தில் ரூ.9,999 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள ரெனால்ட் க்விட் சூப்பர்ஹீரோ எடிசன் ரூ.4.34 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

Recommended For You