Automobile Tamilan

2 மாதங்களில் ரெனோ ட்ரைபர் விநியோகம் 10,000 இலக்கை கடந்தது

Renault Triber production starts

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வீழ்ச்சியில் உள்ள நிலையில் புதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி ரக மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்ட இரு மாதங்களுக்குள் 10,001 கார்களை விநியோகம் செய்துள்ளது. ரூ.4.95 லட்சம் விலை ட்ரைபர் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

முன்பாக இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவன ஹெக்டர் மற்றும் கியா மோட்டார்ஸ் நிறுவன செல்டோஸ் போன்ற கார்களுக்கு அமோகமான ஆதரவு இருந்து வரும் நிலையில், எஸ் பிரெஸ்ஸோ எஸ்யூவி விற்பனையும் சிறப்பாக உள்ள நிலையில், ட்ரைபரின் விற்பனைக்கு எண்ணிக்கை 10,000 யூனிட்டுகளை கடந்துள்ளது. மேலும், அக்டோபர் மாத விற்பனையில் ரெனோ நிறுவன வளர்ச்சி 63 % உள்ளது.

டிரைபரின் என்ஜின்

1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்டு விவிடி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரு விதமாக கிடைக்க உள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் பிறகு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

ரெனோ ட்ரைபரின் மைலேஜ் லிட்டருக்கு 20.5 கிமீ வழங்கும் என ஆராய் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.

RxE ரூ. 4.95 லட்சம்

RxL ரூ. 5.49 லட்சம்

RxS ரூ. 5.99 லட்சம்

RxZ ரூ. 6.49 லட்சம்

மேலும் படிங்க – முழுமையான ரெனோ ட்ரைபர் சிறப்புகள்

Exit mobile version