ஜனவரி முதல் ஸ்கோடா கார்கள் விலை உயருகின்றது

ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் கார்களின் விலையை 2.5 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. முன்பாக இந்தியாவின் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய மாடல்களின் விலையை உயர்த்த உள்ளதை உறுதி செய்திருந்தன.

அந்த வரிசையில் தற்போது ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமான ஸ்கோடாவும் இணைந்து உள்ளது. இதற்கு முன்பாக ஃபோக்ஸ்வேகன் தனது போலோ மற்றும் வென்ட்டோ கார்களின் விலையை அதிகரிப்பதாக அறிவித்திருந்தது.

ஸ்கோடா இந்தியாவில் ரேபிட், ஆக்டேவியா ஆர்எஸ் 245, சூப்பர்ப் மற்றும் கரோக் ஆகிய கார்களை விற்பனை செய்து வருகின்றது. இவற்றின் விலை ரூ.7.99 லட்சம் முதல் ரூ.24.99 லட்சம் வரை எக்ஸ் ஷோரூம் விற்பனை செய்யப்படுகின்றது.

ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் ஃபோக்ஸ்வேகன் பிராஜெக்ட் 2.0 கீழ் இந்திய சந்தையில் பல்வேறு கார்களை வெளியிட உள்ள நிலையில் முதல் மாடலாக விஷன் இன் கான்செப்ட் அடிப்படையிலான கார் 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version