ரூ.24.99 லட்சத்தில் ஸ்கோடா கரோக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

ஸ்கோடா இந்தியா நிறுவனம் கரோக் எஸ்யூவி காரை இந்தியாவில் ரூபாய் 24.99 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மடாலாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்ட உள்ளது.

முன்பாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட யெட்டி எஸ்யூவி-க்கு மாற்றாக வந்துள்ள புதிய ஸ்கோடா கரோக் மாடல் முன்பாக விற்பனையில் உள்ள கோடியாக் எஸ்யூவி மாடலுக்கு கீழாக நிலைநிறுத்தப்பட்டு அந்த காரின் வடிவ தாத்பரியங்களை பின்பற்றியதாக அமைந்துள்ளது. இந்த 5 இருக்கை கொண்ட பெட்ரோல் எஸ்யூவி ஒற்றை வேரியண்டில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட உள்ளது.

கரோக் காரில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் TSI என்ஜின் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

கரோக் காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 202 கிமீ ஆகவும், 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9 விநாடிகளை எடுத்துக் கொள்ளும். இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 14.49 கிமீ என WLTP சான்றிதழ் வழங்கியுள்ளது.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களைப் பொறுத்தவரை 9 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, உட்பட இஎஸ்சி , ரியர் பார்க்கிங் சென்சார், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் ஹீல் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்றவற்றை பெற்றுள்ளது.

5 இருக்கைகளை கொண்ட இந்த மாடலில் மிக நேர்த்தியான இன்டிரியர் வழங்கப்பட்டு 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்றவற்றை கொண்டுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற எம்ஜி ஹெக்டர், ஃபோக்ஸ்வாகன் டி-ராக், டாடா  ஹாரியர், ஜீப் காம்பஸ், செல்டோஸ் மற்றும் கிரெட்டா போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Exit mobile version