ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் ரூ .33.99 லட்சத்தில் அறிமுகமானது

skoda kodiaq

ஆஃப் ரோடு பயன்பாடுகளுக்கு ஏற்ப பல்வேறு அம்சங்களுடன் ஸ்கோடா கோடியாக் ஸ்கவுட் ரூ .33.99 லட்சம் விலையில் பேஸ் ஸ்டைல் மற்றும் டாப் மாடலான Laurin & Klement வேரியண்டுகளுக்கு இடையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்கவுட் வேரியண்ட் வழக்கமான கோடியாக்கிலிருந்து சில வித்தியாசமான வடிவமைப்பு கூறுகளை பெற்றதால் வேறுபடுகிறது.  முன் மற்றும் பின்புற பம்பர்களின் கீழ் பகுதியில் சில்வர் உலோக இன்ஷர்டுகளை கருப்பு பிளாஸ்டிக் உறைப்பூச்சு ஆகியவற்றால் 8 மிமீ வரை காரின் நீளம் அதிகரித்துள்ளது. டூயல் டோன் பெற்ற 18 அங்குல அலாய் வீல் ‘ஸ்கவுட்’ பேட்ஜ்கள் முன் ஃபெண்டர்கள் மற்றும் டெயில்கேடில் இடம்பெற்றுள்ளது. ரூஃப் ரெயில்கள், ORVM கவர்களை கொண்டுள்ளது. மேலும் கோடியாக் ஸ்கவுட் வேரியண்டில் லாவா ப்ளூ, குவார்ட்ஸ் கிரே, மூன் வைட் மற்றும் மேஜிக் பிளாக் ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கின்றது.

மற்ற வேரியண்டுகளில் இருந்து மாறுபட்ட இன்டிரியரை கொண்டுள்ள ஸ்கவுட் வேரியண்டில்  டாஷ்போர்டு மற்றும் கதவுகளில் ஸ்கவுட் பேட்ஜ், மர செருகல்கள் இடம்பெறுள்ளது. கோடியாக் ஸ்கவுட்டில் ஒன்பது ஏர்பேக்குகள், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ-பொருந்தக்கூடிய 9.2 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது. டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஆஃப்-ரோடு டிரைவ் ஆப்ஷன் உடன் மூன்று வரிசை இருக்கைகளையும் கொண்ட ஸ்கவுட்டில் துவக்க இடம் 270 லிட்டர், ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையை மடித்தால் 2,008 லிட்டராக விரிவடைகிறது.

2.0 லிட்டர் TDI டீசல் இஞ்ஜின் 150 hp மற்றும் 350 என்எம் டார்க் வெளிப்படுத்தும் நிலையில் விற்பனைக்கு கிடைக்கும். இதில 7 வேக DSG ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.