ஸ்கோடா குஷாக் காரின் இன்டீரியர் டீசர் வெளியானது

இந்தியாவில் பெரும்பாலான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்ட ஸ்கோடா ஆட்டோவின் புதிய குஷாக் எஸ்யூவி காரின் இன்டீரியர் டிசைன் படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் உற்பத்தி நிலை மாடல் மார்ச் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

முன்பே பல்வேறு முறை இந்த காரின் எக்ஸ்டீரியர் படங்கள் வெளியானதை தொடர்ந்து டீசர் வெளியிடப்பட்டிருந்தது. இந்த காரின் உட்புறத்தில் மிக நேர்த்தியான டிசைன் அமைப்பில் கொடுக்கப்பட்டு சென்டரல் கன்சோலில் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கனெக்ட்டிவ் சார்ந்த கார் மை ஸ்கோடா கனெக்ட் தொழில்நுட்பத்தையும் கொண்டதாக விளங்கும்.

டாப் வேரியண்டுகளில் சூப்பர்ப் Laurin & Klement மாடலில் உள்ளதை போன்ற இரண்டு ஸ்போக் ஸ்டீரியங் வீல் இணைக்கப்பட்டு, குறைந்த விலையில் கிடைக்கும் மாடல்களில் மூன்று ஸ்போக் வீல் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

குஷாக்கில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (115PS/200Nm) மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் (150PS/250Nm) மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் பெறலாம். டீசல் என்ஜின் இடம்பெறுவதற்கு மாற்றாக சிஎன்ஜி என்ஜின் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version